Header Ads



கத்னா (சுன்னத்) செய்தபோது 5 வயது குழந்தை மரணம் - மனிதப் படுகொலை என பெற்றோர் மீது குற்றச்சாட்டு

ஐந்து மாத ஆண் குழந்­தைக்கு பெற்றோர் வீட்டில் மேற்­கொண்ட கத்னா – விருத்­த­சே­த­னத்­தின்­ போது ஏற்­பட்ட தவறின் கார­ண­மாக அக் குழந்தை உயி­ரி­ழந்­துள்­ள­தாக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

இத்­தா­லியில், கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை அக் குழந்­தைக்கு இதயக் கோளாறு ஏற்­பட்ட நிலையில் இத்­தா­லி­யி­லுள்ள பொலொக்னா வைத்­தி­ய­சா­லைக்கு உலங்­கு­வா­னூர்தி மூலம் கொண்டு செல்­லப்­பட்­டது. அன்­றி­ரவு வைத்­தி­ய­சா­லை­யி­லேயே குழந்தை உயி­ரி­ழந்­தது.

கானா நாட்­டினைப் பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்கள் எனத் தெரி­விக்­கப்­படும் அக் குழந்­தையின் பெற்­றோ­ருக்கு மனிதப் படு­கொ­லை­யினை மேற்­கொண்­டார்கள் என்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக வடக்கு மாகா­ண­மான ரெக்­கியோ எமா­லி­யாவின் சட்­ட­வாதி அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. அதன் பின்னர் பிரேத பரி­சோ­தனை இடம்­பெறும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த டிசம்பர் மாதம் ரோமில் இடம்­பெற்ற கத்னா – விருத்­த­சே­த­னத்­தின்­போது அதிக இரத்தம் வெளி­யே­றி­யதன் கார­ண­மாக இரண்டு வயதுச் சிறுவன் உயி­ரி­ழந்தான். இந்த சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த இரண்டு வயதுச் சிறு­வனின் இரட்டைச் சகோ­தரன் தீவிர சிகிச்­சை­யினைத் தொடர்ந்து உயிர் பிழைத்தான். இவர்­க­ளுக்­கான கத்னா சத்­திர சிகிச்சை ரோமின் வட­மேற்கு புற­நகர் பகு­தியில்  அமைந்­துள்ள மொன்­டே­ரொண்டோ சபை மற்றும் இலாப நோக்­கற்ற அமைப்­பான அர்சி ஆகி­ய­வற்றால் அளிக்­கப்­பட்­டுள்ள நிலை­ய­மொன்றில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

லிபி­யாவைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட அமெ­ரிக்க பிரஜை என நம்­பப்­படும் வைத்­தியர் சிறு­வ­னுக்கு அதிக இரத்தம் வெளி­யே­றி­ய­தை­ய­டுத்து அவ­சர உத­வியைக் கோரி­ய­தாக இத்­தா­லிய ஊட­கங்கள் அவ்­வே­ளையில் தெரி­வித்­தன. இரட்டைச் சகோ­த­ரனும் கத்னா சத்­திர சிகிச்­சைக்கு உள்­ளாக்­கப்­பட்டு சென் அன்­ரியா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டான் எனினும் பின்னர் ரோமி­லுள்ள ஜெமேலி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டான்.

நைஜீ­ரி­யாவை பூர்­வீ­க­மாகக் கொண்ட சிறு­வனின் தாய் இத்­தா­லியில் புக­லிடம் தேடும் பெண் என நம்­பப்­ப­டு­கின்­றது. அவ­ருக்கு மேலும் ஐந்து பிள்­ளைகள் நைஜீ­ரி­யாவில் உள்­ளனர்.

குறித்த பெண் கத்­தோ­லிக்­க­ராக இருந்­த­போ­திலும் நைஜீ­ரிய இஸ்­லா­மிய முறைப்­படி குறித்த கத்னா – விருத்­த­சே­த­னத்தைச் செய்­யு­மாறு கோரி­ய­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன.

இத்­தா­லியின் ரோமி­லுள்ள கத்­தோ­லிக்க பெரும்­பான்­மை­யி­ன­ரி­டையே கத்னா – விருத்­த­சே­தனம் செய்யும் வழக்கம் இல்லை. எனினும் குடி­யேற்­ற­வா­சி­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் முஸ்­லிம்­க­ளாவர். அவர்கள் கலா­சார மற்றும் மதக் கார­ணங்­க­ளுக்­காக விருத்­த­சே­தனம் செய்­கின்­றனர். வைத்­தி­ய­சா­லை­களில் இதனைச் செய்­து­கொள்­வதில் இவர்கள் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர்.

இதற்­கான வைத்­தி­ய­சாலைக் கட்­ட­ணங்கள் மிக அதி­க­மாக இருப்­பதும் சிறு­வர்­க­ளுக்கு குறைந்­தது நான்கு வய­தாகும் வரை இதனைச் செய்ய முடி­யாது என வைத்­தி­யர்கள் மறுப்­பதும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நிகழக் கார­ண­மா­கின்­றன.

எனினும் வரு­ட­மொன்­றிற்கு 5,000 இற்கும் மேற்­பட்ட விருத்­த­சே­த­னங்கள் இத்­தா­லியில் இடம்­பெ­று­வ­தா­கவும், அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி சட்­ட­வி­ரோ­த­மாக இடம்­பெ­று­வ­தா­கவும் சுகா­தார தர்ம ஸ்தாப­ன­மான அம்ஸி தெரி­வித்­துள்­ளது.

இவ்­வகை சத்­திர சிகிச்­சைக்கு இத்­தா­லி­யி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லை­களில் 4,000 யூரோக்கள் வரை அற­வி­டப்­ப­டு­கின்­றன. எனினும் அத­னையே கறுப்புச் சந்­தையில் 20 தொடக்கம் 50 யூரோக்கள் வரையே அற­வி­டப்­ப­டு­கின்­றது.

இர­க­சி­ய­மாக விருத்­த­சே­தனம் செய்­யப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்கு கட்­டுப்­ப­டி­யான கட்­ட­ணத்­தினை விருத்­த­சே­த­னத்­திற்­காக அற­வி­டு­மாறும், அதனை மேற்­கொள்­வ­தற்­கான வய­தெல்­லையை குறைக்­கு­மாறும் சுகா­தார அதி­கா­ரி­க­ளிடம் இத்­தா­லி­யி­லுள்ள வெளி­நாட்டு வைத்­தி­யர்கள் சங்­கத்தின் ஸ்தாப­க­ரான புஓட் அஓதி வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
-Vidivelli

1 comment:

  1. நல்லதே நடக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.