Header Ads



காஸாவிலுள்ள 55,000 குடும்பங்களுக்கு, கட்டார் நிவாரண உதவி

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஸா பள்ளத்தாக்கிலுள்ள 55,000 ஏழை குடும் பங்களுக்கு கட்டார் அரசாங்கம் நிதியாதரவு வழங்கியுள்ளதாக கட்டாரின் உள்ளூர் ஊடக மொன்று தெரிவிக்கின்றது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் 100 அமெரிக்க டொலர்களை தபால கங்களில் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு காஸா மக்கள் தபாலகங்களில் ஒன்றுகுவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா மக்களுக்கு கட்டார் நிதி ஆதரவு வழங்கும் நான்காவது கட்டம் இதுவாகும். காஸாவை மீள் கட்டமைப்பதற்கான கட்டாரின் தேசியக் குழுவின் மேற்பார்வையின் கீழ் இந்நிதியாதரவு வழங்கப்பட்டது. கடந்த ஒக்டோபரில் காஸாவுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியாதரவை கட்டார் அரசாங்கம் அறிவித்தது.

காஸா பள்ளத்தாக்கில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்படுகின்றது. இதேவேளை, காஸாவிலுள்ள பிரதான மின்உற்பத்தி நிலையத்திற்கும் கட்டார் தனது பெற்றோலியத்தை இலவசமாக வழங்கி வருகின்றது.

1 comment:

  1. May Allah Bless Qatar for this help to our Bloods in palestine

    ReplyDelete

Powered by Blogger.