Header Ads



பாராளுமன்றத்திற்குள் 50 புத்திஜீவிகள் இருப்பின், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது - ஜனாதிபதி

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 50 பேராவது படித்த மற்றும் புத்திஜீவிகளாக தெரிவாகும் நாளில் நாட்டை கட்டியெழுப்ப எந்த சிரமமும் இருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் தற்போது சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்ள வேண்டுமாயின் புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் மற்றும் கல்விமான்களின் உதவி நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக ஆய்வு திறமை விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது அறிவு, அனுபவம், ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டுக்கும் மக்களுக்காகவும் பணிகளை நிறைவேற்ற முன்னோக்கி வருமாறு நாட்டு மக்களின் பிரதான சேவையாளன் என்ற முறையில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட ஒட்டு மொத்த புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

இலவச கல்வி காரணமாக நாட்டிற்கு படித்தவர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு எந்த குறையும் இல்லை. எனினும் இன்னும் வெற்றி கொள்ள வேண்டிய பல சவால்கள் தாய் நாட்டில் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. சரியான வசனம்.ஆனால் நாட்டு குடிமகன்கள் இன்னும் புரியவில்லை

    ReplyDelete
  2. அப்படியானால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு ஆகக்குறைந்த கல்வித்தகமையாக உயர்தர பரீட்சையில் ஒரு படத்திலாவது சித்திபெற்றிருத்தல் வேண்டும் என்ற கோட்பாட்டை கொடு வாருங்கள்.

    ReplyDelete
  3. You are corect you also same list

    ReplyDelete
  4. First of all you are not deserve to be the president. You are O//L qualified GS.you resign your post and then talk.See Afghanistan President Mr.Ashraff Ghani is American educated and worked in world bank but You?

    ReplyDelete

Powered by Blogger.