Header Ads



500 கோடி ரூபா வைரம், பேராதனை பல்கலைக்கழகத்திற்கு போகிறது


பன்னிப்பிட்டி பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வைரத்தை பரிசோதனை செய்வதற்கு மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபையிடம் பொலிஸார் நேற்று கையளித்தபோதிலும், அந்த நடவடிக்கை இடம்பெறவில்லை.

பன்னிப்பிட்டி – அருவ்வல பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமல்போன சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான வைரம், கடந்த 5 ஆம் திகதி பாணந்துறை – வாழைத்தோட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கெலும் இந்திக எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இது அவ்வளவு பெறுமதிவாய்ந்த ஒன்றாகத் தெரியவில்லை. அதன் காரணமான அதற்கு பெறுமதி இல்லை எனக்கூறாமால் மாணிக்கக்கல் அதிகாரசபை அதனை மதிப்பீடு செய்ய இணங்கவில்லை. சிலநேரங்களில் மதிப்பீடு செய்ய ஆய்வுக்குச் சென்ற ஹிரோயின் தூள், ஆய்வின் இறுதியில் வெறுமனே பாண்மாவு ஆக வௌிவருவது போல் இந்தக்கல்லின் கதியும் அதுவாகத்தான் மாறியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
  2. Yes this does not look like a gem at all... May be already the original stone is replaced by this fake...

    ReplyDelete

Powered by Blogger.