Header Ads



அமீரக நாடாளுமன்றத்திலும் 50 விழுக்காடு பெண்கள் இடம்பெற நடவடிக்கை, 2 பெண் நீதிபதிகளும் நியமனம்


துபாயில் கூட்டாட்சி (ஃபெடரல்) நீதித்துறை சார்ந்து கதீஜா கலீஃபா அல் மலாஸ், ஸலாமா ராஷித் சலீம் ஆகிய இரண்டு பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் ஏற்கனவே நீதிபதிகளாய்ப் பெண்கள் பலர் சேவையாற்றி வருகின்றனர்.

ஆயினும் ஃபெடரல்- கூட்டாட்சி சட்ட முறைப்படி பெண் நீதிபதிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பெண்கள் காழிகள்- நீதிபதிகள் பொறுப்புக்கு வரலாமா, கூடாதா என்னும் விவாதங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் சாயித், இரண்டு பெண் நீதிபதிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

அமீரக நாடாளுமன்றத்திலும் 50 விழுக்காடு பெண்கள் இடம்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமீரக அரசு அறிவித்துள்ளது.

-சிராஜுல்ஹஸன்

No comments

Powered by Blogger.