Header Ads



49 பேரை கொன்றபின்னும், அடங்காத வெறி - தீவிரவாதியின் விரல்கள் கூறும் குறிப்பு

நியூசிலாந்தில் நடந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் காட்டிய முத்திரை புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் நேற்று தொழுகை நடைபெற்ற போது நடந்த துப்பாக்க்சி சூடு சம்பவத்தில், இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர்.

50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியாகவும், தீவிரவாதியுமான Brenton Tarrant என்ற 28 வயது நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

அப்போது அவன் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல், அமைதியாக இருந்ததுடன், கையில் இருக்கும் மூன்று விரல்களை(WHITE POWER' SIGN) மட்டுமே காண்பித்தான்.

அவன் ஏன் அப்படி காண்பித்தான் அதன் அர்த்தம் என்ன என்று பார்த்த போது, அங்கிருக்கும் ஊடகங்கள் இது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளன.

அதில் ஒரு ஊடகம் நான் செய்தது சரியே என்பதை குறிக்கும் விதமாக அவன் இப்படி காட்டியுள்ளான் எனவும், வெள்ளையர்களின் மேலாதிக்கத்தை குறிக்கும் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.