Header Ads



மைத்திரிபால ஐ.தே.க. யுடன் 3 ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டு, தற்போது என்ன கூறினாலும் ஏற்புடையதா..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மூன்றாண்டுகள் ஆட்சி நடத்தி விட்டு, தற்போது என்ன கூறினாலும் அது ஏற்புடையதா என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டியில் இன்று -31- நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பண்டாரநாயக்க கொள்கையை பாதுகாப்பார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் இருக்கின்றது. டிசம்பர் 9 ஆம் திகதி இலங்கையில் புதிய ஜனாதிபதி ஆட்சியில் இருப்பார்.

அந்த ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதியாகவே இருப்பார். அப்போது தற்போதுள்ள உறுதிமொழிகள் எல்லாம் செல்லுப்படியாகாது.

பண்டாரநாயக்க வேஷ்டியும் பனியனும் அணிந்து, பௌத்த பிக்குகள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளிகளின் பலத்துடன் வெளியில் லந்த போது, மறுபுறம் டி.ஏ. ராஜபக்ச, பண்டாரநாயக்கவுடன் இணைந்துக்கொண்டார். மகிந்த ராஜபக்சவுக்கும் இவர்களின் கொள்கையே உள்ளது.

45 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச, தற்போது ஜனாதிபதித் தேர்தல் போட்டியை வழி நடத்தி வருகிறார் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.