Header Ads



36 நாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு, புதிய வசதி


வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.

பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் வெற்றியைப் பொறுத்து, இதனை நீடிப்பதா- இல்லையா என்று முடிவு செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

1 comment:

  1. While these people get free visa we have to pay huge amounts for visa to those countries. They also should consider giving us free visa.

    ReplyDelete

Powered by Blogger.