Header Ads



2 முஸ்லிம் நாடுகளின் பங்களிப்புடன் தடுக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதல், அபிநந்தனும் விடுதலையானார்

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தபோதிலும், இதற்காக திரைமறைவில் ஏராளமான காய் நகர்த்தல்கள் நடந்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளன.

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடும் பதற்றமான சூழல் உருவானது.

மட்டுமின்றி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அபிநந்தன் என்ற விமானி பாகிஸ்தானில் சிக்கினார்.

அவரை மீட்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது ஐக்கிய அரபு நாடுகளும் சவுதி அரேபியாவும் முக்கிய பங்காற்றியதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கான சவுதி அரேபியா தூதர் சவுத் அல்- சாத்தி இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும், அபுதாபியின் இளவரசருமான முகமது பின் சயாத்தும் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

முகமது சயாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடக்கக்கூடாது என்பதில் சவுதி அரேபியா இளவரசர் சல்மான் மற்றும் அபுதாபி இளவரசர் முகமது சயாத்தும் தீவிரமாக இருந்துள்ளனர்.

சவுதி இளவசர் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது இருநாடுகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதுபோலவே ஐக்கிய அரபு அமீரகமும் பெருமளவு முதலீடு செய்து வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிகஅளவில் சவுதியும், ஐக்கிய அரபு அமீரகமும் முதலீடு செய்துள்ள நிலையில் போர் ஏற்பட்டால் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்பதால் அதனை தவிர்க்க இருநாடுகளும் தீவிரம் காட்டியதாக தெரியவந்துள்ளது.

1 comment:

  1. கொபி பேஸ்ட் ப்ரொம் த ஹிந்து

    ReplyDelete

Powered by Blogger.