Header Ads



பள்ளிவாசல் தாக்குதலில் உயிர்களை காப்பாற்றிய 2 பேர் குறித்து வெளியான தகவல்

நியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்.

லின்வுட் மசூதியின் இமாமான Abdul Lateef Zirullahவும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Abdul Azizம் ஏராளமான இரத்தம் சிந்திய லின்வுட் மசூதியை சுத்திகரிக்கும் பாரம்பரிய நிகழ்வின்போது மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்வின்போது இமாம் Lateef கண்ணீரை அடக்க முடியாமல் கதறியபோது, அவர் தோளை அன்பாக தட்டிக்கொடுத்த ஒரு பொலிசார் உட்பட பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.

லின்வுட் மசூதிக்குள் இருக்கும்போது அங்கு வந்த தீவிரவாதி பிரெண்டனை முதலில் பார்த்தவர் இமாம் Lateefதான்.

Lateef எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்கச் செய்ததோடு, தொழுகைக்கு வந்திருந்த மக்களை தரையில் படுக்கச் சொல்லி உஷார் படுத்தியதால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

அத்துடன் உடனடியாக அவர் பொலிசாருக்கும் தகவலளித்தது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடந்த சிறிது நேரத்திற்குப்பின் உடை முழுவதும் இரத்தக்கறையுடன் Lateef நிற்கும் புகைப்படங்கள் வெளியாகின.

அதேபோல் Abdul Aziz என்பவர் சமயோகிதமாக செயல்பட்டு சத்தமிட்டுக் கொண்டே பிரெண்டனை துரத்தியடித்தார்.

அவன் கீழே போட்டு சென்ற ஒரு துப்பாக்கியை எடுத்து அவனது கார் மீதே அவர் தூக்கி எறிந்ததில் கார் கண்ணாடி உடந்து சிதற, என்ன நடக்கிறது என்று புரியாத அவன் காரை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இந்த இரண்டு ஹீரோக்களும் மீண்டும் லின்வுட் மசூதிக்கு வந்தபோது ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி அவர்கள் செய்த நற்செயலை பறைசாற்றுகின்றன.

No comments

Powered by Blogger.