Header Ads



2 வருடங்களாக தாக்குதலுக்கு திட்டமிட்ட பயங்கரவாதி, தான் டொனல்ட் டிரம்பின் ஆதரவாளர் என்கிறான்

நியுசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் உள்ள  முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்கதல்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பிரேன்டன் டெரன்ட் என்பவரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜையாக கருதப்படும் இவர் 28 வயதுடையவர் எனவும் சிறைக் கைதிகள் அணியும் வெள்ளைநிற ஆடையில் காணப்பட்டதாகவும், விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நீதிமன்ற வளாகத்துக்கு குறித்த சந்தேகநபர் விலங்கிடப்பட்டு அழைத்து வரும் போது அவரது கை விரல்களினால் வெள்ளையர்களின் சின்னத்தை அடையாளப்படுத்தி ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை விடுதலை செய்யுமாரோ, தனக்கு பிணை வழங்குமாரோ எந்தவித வேண்டுகோள்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் நிவ்சவுத்வெல்ஸில் பிறந்த இவர், அந்நாட்டின் உடற்பயிற்சி நிலையமொன்றில் ஆலோசகராக கடமையாற்றி வந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நூர் பள்ளிவாயல் தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தளத்தில் அறிவிப்பொன்றையும் இந்த சந்தேகநபர் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள 74 பக்கங்களைக் கொண்ட  நீண்ட அறிக்கையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதில், கடந்த 2011 ஆம் அண்டு நோர்வேயில் 77 பேரை கொலை செய்த அன்டர்ஸ் பிரேய்விக்கை தான் முன்மாதிரியாகக் கொண்டு தாக்குதல் நடாத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், 2017 இல் சுவீடனில் ஜிஹாத் பயங்கரவாதிகள் டிரக் ரக வாகனமொன்றினால் தாக்குதல் நடாத்தி உயிரிழந்தவர்களிடையே உயிரிழந்த பிள்ளையின் மரணமும் இந்த தாக்குதலை நடாத்த தூண்டுதலாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்காக இந்த தாக்குதலை நடாத்தியாதாகவும் அந்த சந்தேகநபர் நியாயம் கூறியுள்ளார்.
தன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் ஆதரவாளராகவும் அறிமுகம் செய்துள்ள சந்தேகநபரான (பயங்கரவாதி) பிரேன்டன், இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு சாதாரண வெள்ளையன் எனவும், தனக்கு 28 வயது எனவும் குறிப்பிட்டுள்ள இவர், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் அந்த அறிக்கையில் மேலும் அறிமுகம் செய்துள்ளார்.
எது எப்படிப் போனாலும், நியுஸிலாந்து வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ஒரு தாக்குதல் சம்பவமாக இப்பள்ளிவாயல் தாக்குதல் நோக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, அந்நாட்டில் துப்பாக்கி தொடர்பில் காணப்படும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜசின்டா ஆர்டென் குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.   

நன்றி- அத சிங்கள பத்திரிகை
தமிழில்- முஹிடீன் இஸ்லாஹி

1 comment:

  1. உலகம் முழுவதும் முஸ்லிம் தீவிரவாதிகள் எனும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது போல் மற்ற சமூகத்திலும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.