Header Ads



294 கிலோ ஹெரோயின் - சுஜீ, மொரில் உள்ளிட்ட 5 பேரே சூத்திரதாரிகள்

கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட  294 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு அனுப்பியதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர்களான ‘கொஸ்கொட சுஜீ’ மற்றும் ‘மொரில்’ உட்பட ஐந்து பேரை கைது செய்வதற்கு நேற்று (01) சர்வதேச பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே கைதாகியுள்ள சந்தேக நபர்களான எம்.டபிள்யு.எம். அமீர் மற்றும் எம்.ஏ. ருஷ்தி ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இப்பிடியாணையின் பிரதிகளை குடிவரவு- குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத்தின் உரிய அதிகாரிகளுக்கும் கிடைக்கும்படி செய்யுமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

‘கொஸ்கொட சுஜீ’ என்றழைக்கப்படும் சுஜீவ என்ற நபருக்கும் அன்டணி மைக்கல் மொறில், எம்.எஸ். பாயிஸ், டபிள்யு.ஏ. ரஹீம் ஆகியோருடன் சுஹோன் செரிக் ஏ. ஹூசைன் என்ற பங்களாதேஷ் பிரஜைகளுக்குமே இவ்வாறு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயினை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்ட  அமீர் மற்றும் ருஷ்தி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது 294.490 கிலோ ஹெரோயினை கொஸ்கொட சுஜீ உள்ளிட்ட ஐந்துபேரே கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

No comments

Powered by Blogger.