Header Ads



நியூசிலாந்தில் வீரமரணமடைந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு அரச உதவி - 20 கார்களை எடுத்துச்செல்ல யாருமில்லை


நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த மசூதியின் வெளிப்புற பக்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 20க்கும் மேற்பட்ட கார்கள் மசூதிக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் துப்பாக்கி சூட்டில் இறந்துபோனவர்களின் கார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், மசூதிக்குள் இருந்து சடலங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடக்கம் செய்வதற்காக கல்லறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மசூதிக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இறந்துபோனவர்களின் கார்களை எடுத்துச்செல்ல இதுவரை யாரும் வரவில்லை, எனவே அவர்களது உறவிர்கள் வந்து எடுத்து செல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இறந்துபோனவர்களின் குடும்பத்தினருக்கு $10,000 டொலர் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது இறந்துபோனவர்களின் இறுதி சடங்கை மேற்கொள்வதற்காக செலவு ஆகும்.



2 comments:

  1. “அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
    (அல்குர்ஆன் : 36:31)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. கல்லறைகள் கட்டும் பணி...

    ReplyDelete

Powered by Blogger.