Header Ads



வருடத்திற்கு 1000 பிக்குகள், காவியுடையை களைகின்றனர் - பாதுகாக்க வருகிறது விசேட திட்டம்

வருடாந்தம் சுமார் ஆயிரம் பௌத்த பிக்குகள் காவியுடைகளை களைந்து விடுவதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த பிக்குகளை பாதுகாப்பதற்கான திட்டமொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நோக்கில் விஹாரைகளை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆண்டு தோறும் ஆயிரம் வரையிலான பௌத்த பிக்குகள் சீருடைகளை கலைந்து லௌகீக வாழ்க்கைக்கு திரும்பி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Inability to resist worldly pleasures and prevailing lifestyle changes could be reasons for this trend.

    ReplyDelete

Powered by Blogger.