Header Ads



இலங்கையில் ஆபத்தான போதைக்கு அடிமையாகியுள்ள VIP க்கள்

இலங்கையில் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பிரதான தரப்பினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய அமைச்சரவை அமைச்சர்கள் 6 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள், வர்த்தகர்கள், வங்கியாளர்கள், ஊடகவியலாளர்கள், நடிகைகள், நடிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கொக்கொய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் போதைப்பொருள் அருந்திய பின்னரே நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 5 வருடங்களாக இலங்கையில் வியாபித்துள்ள இந்த ஆபத்து காரணமாக, பிரதான பதவிகளில் செயற்படும் பலர் இதற்கு அடிமையாகியுள்ளனர்.

பிரபல விமான நிறுவனங்களின் ஊழியர்கள் ஆரம்பத்திலேயே இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.

சமகாலத்தில் இலங்கையில் கொக்கொய்ன் போதைப்பொருள் பாரியளவில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் உயர் மட்டத்தில் இருந்து மத்திய தரம் வரையில் அனைவரும் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கொக்கொய்ன் போதைப்பொருள் ஆபத்தானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனம் செய்துள்ளார்.

போதைப்பொருளுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தயாராகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. "நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?"
    (அல்குர்ஆன் : 5:91)

    ReplyDelete

Powered by Blogger.