Header Ads



மதுஷ் கைது : பொய்யான தகவல்கள் பரவுகின்றன- டலஸ்

அபுதாபியில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு தலைவன் மற்றும்  மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இன்று -08- மாறுப்பட்ட பொய்யான வதந்திகளே மக்கள் மத்தியிலும் பேசப்படுகின்றது.

கம்புறுப்பிடிய பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது. இச்செய்தியானது முற்றிலும் பொய்யானது என  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  கம்புறுபிடிய பிரதேச சபையில் 17 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் 10பேர்   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்,  04 பேர் ஐக்கிய  தேசிய கட்சியினர்,  சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர்,  சுயாதீனமாக தெரிவு  செய்யப்பட்டவர் ஒருவர் . இவர்கள் அனைவரும் இன்றும் நாட்டிலே உள்ளனர்.  ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம்  முன்னெடுக்கும் விசாரனைகளை பகிரங்கப்படுத்த முடியாத தன்மை காணப்பட்டாலும், மாற்று வழிமுறைகளிலாவது கைது செய்யப்பட்டடுள்ளவர்களின் உண்மையான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.