Header Ads



சுவிற்சர்லாந்தில் அல்குர்ஆன் போட்டி - பெருமளவு இலங்கை சிறுவர்சிறுமியர் பங்கேற்பு (படங்கள்)


ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்த அல்குர்ஆன் - போட்டி 2019 சுவிற்சர்லாந்து ஊர்டோப் நகரில் 16.02.2019 அன்று நடைபெற்றது.

நிலையத்தின் தலைவர் ஹனீப் மொஹமட் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், நடுவர்களாக சோமாலியா நாட்டைச்சேர்ந்த உலமாக்களுடன், பிரதம அதீதியாக சுபியான் ஜுனைத்தீன் (Eimf முன்னாள் செயலாளர்) பங்கேற்றார்.

குர்ஆன் போட்டிக்கு தஜ்வீத் முறைப்படி பிள்ளைகளை பயிற்றுவிப்பதில் பைரோஜா ஹனீபுடன், சிறுவர் போட்டியை நெறியாள்கை செய்வதில் சில சகோதரிகள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்சிறுமியர் பங்கேற்ற இப்போட்டியில் ஏனைய நாட்டு முஸ்லிம் சிறுவர்சிறுமியரும் பங்கேற்றனர். சுவிஸ் நாட்டிற்கு அருகிலுள்ள பிரான்ஸ், ஜேர்மனி நாடுகளில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் பெற்றோரும் இப்போட்டியில் தமது பிள்ளைகளை பங்கேற்கச் செய்திருந்தனர்.

இவர்களுடன் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆகியோரும்  குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியிருந்தனர். 







2 comments:

Powered by Blogger.