Header Ads



முஸ்லிம்களின் பங்களிப்பு மிக அவசியம், என்னை இனவாதியாக காட்ட முயற்சி, யாரும் நம்ப வேண்டாம் - கோட்டபாய


முள்னாள் பாதுகாப்புச் செயலாளரும், எதிர்கால ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் எனவும் எதிர்பார்க்கப்படும் கோட்டாயாய ராஜபக்‌ஷ அவர்களுடனான முஸ்லிம் கல்வியலாளர்கள், மற்றும் புத்திஜீவிகளின் சந்திப்பு நேற்று (19:02:2018) கொழும்பு அத்துல்கோட்டையில் உள்ள "வியத்மக" காரியாலயத்தில் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் அவர்களின்ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கூறுகையில், 

இந்நாட்டில் முஸ்லிம்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள்,மட்டுமல்ல இந்நாட்டின் பல துறைகளுக்கு பங்களிப்புச் செய்தவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், எஞ்சிய இறுதி நான்கு வருடங்களில் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் வட,கிழக்கில் மேற்கொள்ளப்பட்டன, அதேவேளை நாட்டை ஒருமுகப்படுத்துவதற்கும், மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அபிவிருத்தியே சிறந்த வழிமுறை என்ற என்ற அடிப்படையில் மேற்படி பல திட்டங்கள் , முன்கொண்டு செல்லப்பட்டன, அவ்வாறான திட்டங்களால் சிறுபான்மையினர் பல நன்மைகளை அடைந்துள்ளனர், 

இன்னும் முஸ்லிம் மக்களிடையே  என்னை ஒரு இனவாதி என்று சுட்டிக் காட்டும் பல திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, அவற்றை யாரும் நம்ப வேண்டாம், இவற்றுக்கு பின்னால் பல சக்திகள் உள்ளன, அவர்களின் நோக்கம் இந்நாட்டில் இனங்களிடையேயான உறவை சீர்குலைப்தேயாகும், எனக்கு முஸ்லிம்களுனான நீண்டகால உறவு உள்ளது, நான் படையினருக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் கூட எனது மிக நம்பிக்கைக்கு உரியவராக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக  நான் நியமித்து இருந்த்து சுறே சலே  என்ற ஒரு  மலே முஸ்லிம் அதிகாரியையே ஆகும், இன்னும் பல முஸ்லிம்  இராணுவ அதிகாரிகளும் கொடிய  யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவினர்,

அதேபோல் நான் பிறந்த ஊருக்கு அருகில் இருந்தத, ஒரு முஸ்லிம் கிராமம் ஆகும், அதுமட்டுமின்றி, மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசில் மேற்கொள்ளப்பட் ட அதிகமான அபிவிருத்தித் திட்டங்களில் ஒப்பந்தக்கார்ர்களாகவும் அதனை நிறைவேற்றவும் நாங்கள் பல முஸ்லிம்களை நியமித்திருந்தோம், அத்தோடு, எமது ஆட்சிக் காலத்தில் கொழும்பில் வசித்த சேரிப்புற மக்களுக்கான அடுக்குமாடி வீட்டுத் திட்டங்களில், சில திட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமே உள்ளடக்கியதாகவும் அமைந்திருந்த்து, அந்த வகையில் நாம் யாருக்கும் துரோகம் இழைக்க வில்லை, 

அது போலவே புத்தளத்தில்  இன்று இடம்பெறும் குப்பை தொடர்பான திட்டம் பற்றி எங்களிடம் இருந்த அணுகுமுறையும் வேறுபட்டது, அது மக்களைப்பாதிக்காத முறையில் சமூக, சமயத் தலைவர்களின் அங்கிகாரத்துடன் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து, ஆனால் அவை இன்று கவனத்திற் கொள்ளப்பட வில்லை,

அந்தவகையில் நாட்டை அபிவிருத்தி செய்யும்  எமது எதிர்கால அரசியல் ,அபிவிருத்தித் திட்டங்களிலும் முஸ்லிம்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும், அதன்மூலமே இந் நாட்டை வளமிக்க நாடாக மாற்றி அமைக்க முடியும் என்பதே தனது இலக்காகும் என தெரிவித்தார், 

இந் நிகழ்வில்  பிரபல சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கணக்காய்வாளர் கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளையும் ,அவற்றைத் தீர்ப்பதற்கான வழு முறைகள் பற்றியும் கலந்துரையாடினர், இரண்டு மணித்தியாலம் இடம்பெற்ற இச் சந்திப்பு மிக முக்கிய முடிவுகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும் தருவதாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்,

முபிஸால் அபூபக்கர்,
20:02:2019

3 comments:

  1. When Gnanasara Thero was lambasting Islam, Holy Quran and the Muslims, where was Mr. Gota? Sri Lankan Muslims know who is who and why they are making these statements these days. Unity of all ethnic groups is important for our well being but it's genuineness need to be proved in their actions in the future.

    ReplyDelete
  2. The Sinhala Buddhist nationalism and it's byproduct racism are political reality of Sri Lanka today. Its very difficult to say who is really inciting racial hate against minorities, particularly against Muslims or which party is more racist than other, if we look at the recent events and the failure of successive parties in power to take decisive action to eliminate such event. In this background, its easy for either Mr. GR or his promoters to claim that Mr. GB is innocent in this regards. In present day complex political context,its not a bad idea for our leaders and intellectuals to open a channel for productive dialog with one of the prospective presidential election candidate, who is having a decent probability of victory.
    But I have a few question to Sr. lecturer Abu-bakr,
    1. It was when Mr. GR and his brothers were in power that hatred against Muslims re-emerged in Sri Lanka to a shocking level (comparable to 1815). Why the government that was very popular for its rigid and timely action on all other matters of concerns, completely ignored the calls from many parties to bring the situation under control?
    2. Even today, except claiming that the event unfolded in those days are calculated projects by international and nation forces working against the country and UNP's drama to topple the MR's government, why we never seen anyone from JO, MR's team, or GR's team categorically denounced those incidents, including declaring those who engaged in such campaigns are also traitors, as they frequently declaring RW and his inner circles?
    3. Why we are witnessing all those who directly and indirectly talking and acting against Muslims and other non-Sinhalese communities in social medias and traditional medias are not only supports of MR and GR, but also worship then as the only real Sinhalese leaders?
    4. Why MR or GR or any other prominent figures in their parties, explicitly requesting their support base to give-up any hate against minorities, if they have any?
    4. Why almost all those public figures and civil organizations campaigning for equal rights and dignity for all communities are not appearing in MR's or GR's platforms but always found to be in the opposite site?
    5. Why the political figures and clergy obsessed with the ideas of Sinhala Buddhist nationalism are rallying around MR and GR?
    6. What guarantee MR or GR or Sr. lecturer Abu-bakr and his team can give Muslim communities, that GR's returning to power will not once again give the opportunity for the racist elements to have a free run as the did in the past?
    7. In this context, isn't it wise for GR to accept responsibility for his misguided programs of the past and apologize for the role he played in those evens, and promise that he will not support such activities in his future administration? In my view, this might give GR some room for capitalizing the present state our disappointment with the present unpopular UNP lead government and minority support.
    Over to you Sr. lecturer Abu-bakr and his team.

    ReplyDelete
  3. "THE MUSLIM VOICE" wishes to thank Sr. Lecturer Mubesaal Abu-bakr (முபிஸால் அபூபக்கர்) for taking this great move to meet with a group of Interllectuals, Professionals, Businessmen and others, former defense secretray Gotabaya Rajapaksa and the aspiring SLPP/JO/Mahinda Pela Presidential candidate at the next presidential elections in Sri Lanka. It is a happy incident to see that, NOT ONLY the "pamaramakkal and the ordinary poraaligal" who are gathering around Gotabaya Rajapaksa (SLPP/JO/Mahinda Pela), but the "educated cream" of the Muslim community have also began to move towards the "POLITICAL REALITY" that can be a blessing to our community in the near future, Insha Allah. This is what "The Muslim Voice" has been praying for in the wilderness of the Muslim political field" in Sri Lanka which has been dominated by the "DECEPTIVE, HOODWINKING and SELFISH Muslim political leaders, the ACJU and the so-called Muslim Civil Society leaders and movements.
    "The Muslim Voice" wishes to extend it's fullest support and best wishes to Brother Sr. Lecturer Mubesaal Abu-bakr (முபிஸால் அபூபக்கர்) and his team and pray that they will continue to have more meetings with more representation to appraise Gotabaya Rajapaksa about the "REALITY" of the Muslim voters and their aspirations and inspirations and to creat a "powerfull" LOBBY to guide the Muslim Vote Bank (nearly 800,000 voters) to support Gotabaya Rajapaksa at the next Presidentail Elections, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.