Header Ads



இலங்கைக்குள் மதூஷை, இரகசியமாகவே கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது - குழப்பியடித்தது யார்...?

விடு­தலைப் புலி­களின் முக்­கிய நப­ரான கே.பியை எவ்­வாறு நீதி­மன்ற, பொலிஸ் தலை­யீ­டில்­லாது நாட்­டுக்கு வர­வ­ழைக்க முடிந்­ததோ அது­போன்றே மதூஷையும் இர­க­சி­ய­மாக நாட்­டுக்கு கொண்­டு­வரத் திட்டம் வகுக்­கப்­பட்­டது. எனினும் ஊட­கங்­களின் தகவல் பரவல் மூல­மா­கவே மதூஷின் இலங்கை வலைய­மைப்பை முற்­றாக முடக்கும் பணி­களை பொலிஸார் ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே அடை­யாளம் காணப்­பட்­டுள்ள இந்த ஏழு பேரையும் தேடி இவ்­வி­சா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  9 பேரைத் தேடி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், நேற்று முன்தினம் சூரி­ய­வெ­வயில் வைத்து கெசா எனும் அசேல எரங்க, சுசந்­த­கு­மார ஆகிய இருவர் தங்­காலை குற்­றத்­த­டுப்புப் பிரிவு மற்றும் பாதாள உலக தடுப்பு பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்­டனர். இதன்­போது ரீ 56 ரக துப்­பாக்கி மற்றும் தோட்­டாக்கள், ஹெரோயின் என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்­டன. இந் நிலை­யி­லேயே தென் மாகா­ணத்தில் மதூ­ஷுக்கு மிக நெருக்­க­மான  மேலும் 7 பேரைத் தேடி விசா­ரணை தொடர்­வ­தாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலு­வ­லக தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

குறிப்­பாக நேற்று மாலை வரை  தென் மற்றும் மேல் மாகா­ணங்­களில், மதூஷ் வலை­ய­மைப்­புடன் தொடர்­புள்ள  12 பேர் வரையில் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவர்கள் அனை­வ­ரி­டமும்  தீவிர விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

தேட­ப்படும் தெற்கின் ஏழு பேரும் தற்­போது இருப்­பி­டங்­களை விட்டுத் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் பொலிஸ் அதி­ரடிப் படை, திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் பிரி­வுடன் இணைந்து விசா­ர­ணை­களை தென் மாகா­ணத்தின் சிறப்பு பொலிஸ் குழுக்கள் முன்­னெ­டுத்­துள்­ளன.

இத­னி­டையே  மதூஷின் சகாக்­க­ளுக்கு மேல­தி­க­மாக தற்­போது டுபாயில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ள அங்­கொட லொக்கா எனும் பாதாள உலகத் தலை­வரின் சகாக்­க­ளுக்குள் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. அங்­கொட லொக்­காவின்  சகா ஒருவர் நேற்று பத்­த­ர­முல்­லையில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.  வலான துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்த தக­வ­லொன்­றுக்கு அமை­வாக மோட்டார்  வாக­ன­மொன்றில் பய­ணிக்­கும்­போது அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். 40 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் இதன்­போது மீட்­கப்­பட்­ட­தாகக் கூறிய பொலிசார், அவரை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக மிரி­ஹான விஷேட விசா­ரணைப் பிரி­வி­ன­ரிடம் கைய­ளித்­த­தாகக் கூறினர்.

கடந்த 5 ஆம் திகதி அதி­காலை மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட பாதாள உலக கும்பல் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் கைதா­னதைத் தொடர்ந்து,  மதூஷ் மற்றும் மதூஷின்  சார்­பி­லான பாதாள உலக கும்­பல்­களை வேட்­டை­யாடும் நட­வ­டிக்­கை­களும், மதூ­ஷுடன் கைகோர்த்­தவர்கள் யார் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களும் ஆரம்­ப­மா­கின. இந்­நி­லையில் கடந்த 7 ஆம் திகதி மாலை அமீ­ர­கத்தில் மதூ­ஷுடன் கைதான பாடகர் அமல் பெரேரா  மற்றும் நாடக நடிகர்  ரயன் வேன் ரொயன் ஆகி­யோரின் வீடுகள் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை மற்றும் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ரினால் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்பட்­டன. அதி­ரடிப் படைக் கட்­டளைத் தள­ப­தியும் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ரு­மான  எம்.ஆர். லத்­தீபின்  உத்­த­ர­வுக்­க­மைய இந்த சோத­னைகள் மஹ­ர­கம மற்றும் தெஹி­வளை  ஆகிய பகு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இதன்­போது பாடகர் அமல் பெரே­ராவின்  மஹ­ர­கம வீட்­டி­லி­ருந்து கொக்கைன் போதைப் பொருள் பயன்­பாட்­டுக்கு உதவும் ஒரு வகை உப­க­ரணம் மற்றும் வெற்று கொக்கைன் பக்­கற்­றுக்கள் மீட்­கப்­பட்­டன. இது தொடர்பில் அவ­ரது சகோ­த­ரரை பொலிசார் விசா­ரித்த நிலையில் வாக்­கு­மூலம்  பெற்­றுக்­கொண்­டனர்.

No comments

Powered by Blogger.