Header Ads



முஸ்லிம் சமூகத்தை, குற்றம் சுமத்த வேண்டாம் - பாராளுமன்றத்தில் தக்க பதிலடி

நாட்டில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை யார் மேற்­கொண்­டாலும் அது­தொ­டர்­பான சந்­தேக நபர்களின் பெய­ரைக்­கொண்டு விமர்­சிக்­க­வேண்டும். மாறாக அந்த நபர்­களின் சமூ­கத்தை குறிப்­பிட்டு விமர்­சிப்­பது அந்தசமூ­கத்தை பயங்­க­ர­வா­தத்­துக்கு தூண்­டு­வது போலா­கி­வி­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தாய்­நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்க இட­ம­ளிக்க கூடாது. புத்­தளம் பிர­தே­சத்தில் கைப்­பற்றப்பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். அதில் மாற்­றுக்­க­ருத்து எமக்­கி­டையில் இல்லை. ஆனால் குறித்த சம்­ப­வத்­துடன் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் நபரின் பெயரை குறிப்­பிட்டு விமர்­சிப்­ப­தாக இருந்தால் அது­தொ­டர்பில் நாங்கள் ஆட்­சே­பனை செய்­ய­மாட்டோம்.

ஆனால், இங்கு உரை­யாற்­றிய எம்.பி. ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் குற்­றம்­சாட்­டியே விமர்­சித்து வந்தார். இதனை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். நாட்டில் யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டது. அத்­துடன் முஸ்லிம் கட்­சிகள் ஆளும் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­துக்­கொண்டு யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வர ஆத­ர­வ­ளித்து வந்­தது. அவ்­வா­றான நிலையில் நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்க முஸ்லிம் சமூகம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை.

அத்­துடன் இநத நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கக்­கூ­டாது என்று கரு­தினால் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை யார் மேற்­கொண்­டாலும் அந்த நபர்­களின் பெயர்­களை தெரி­வித்து விமர்­சிக்­கலாம். ஆனால் குறித்த நபர்­களின் சமூ­கத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு விமர்­சித்தால் குறித்த சமூ­கத்தை பயங்­க­ர­வா­தத்­துக்கு தூண்­டு­வ­துபோல் ஆகி­விடும்.

எனவே, புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்துக்கு முன்நிறுத்தவேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடாகும். அவர்களை பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் துணைபோகமாட்டோம் என்றார்.

No comments

Powered by Blogger.