Header Ads



புத்தளத்தில் இன்று, மாபெரும் இப்தார் - திரண்டுவந்த பொது மக்கள் - ஏன் தெரியுமா..?


புத்தளம் கொழும்புமுகத்திடலில் [Colombo face] மாபெரும் இப்தார் நிகழ்வு இன்று -14-  நடந்தது.

புத்தளம் பிரதேச முஸ்லிம்கள் விஷேட நோன்பு நோற்றுள்ள நிலையிலேயே இந்த இப்தார் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் மார்ச் 15ம் திகதி முதல் கொட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் பிரதேச மக்கள் கடந்த மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்வமத தலைமைகளின் ஆலோசனைகளின்படி நேற்று கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுத்ததன் தொடராக அனைத்து மக்களும் விஷேட நோன்பு நோற்று துஆ பிரார்த்தனைகளில் இன்று ஈடுபட்டனர்.

நாளைய தினம் புத்தளம் கொழும்புமுகத்திடலில் [colombo Face] மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடரும் இந்த மக்களின் போராட்டம் தொடர்பில் அரசு எடுக்கும் முடிவு என்ன?

குறிப்பாக இந்த புத்தளம் மாவட்டத்தில் - அனல் மின்நிலையம்,சீமெந்து தொழிற்சாலை,காற்றாலை மின்சாரம் போன்ற அனைத்து திட்டங்களையும் ஆரம்பித்தாலும் இந்த மக்களுக்கு என்ன நன்மை ?
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தால் அரசாங்கத்திற்கு இலாபம்... ஆனால் புத்தளம் தொடக்கம் கற்பிட்டி வரை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் மின்சாரம் இல்லை ஏன்?

அரசாங்கம் இந்த குப்பைத் திட்டத்தை நிறுத்துமா? அல்லது இந்த மக்கள் மௌனமாக்கப்படுவார்களா?

-Sivaraja

No comments

Powered by Blogger.