February 03, 2019

வீரகேசரி வெளியிட்ட, பொய் செய்தி - கவலைப்படுகிறார் ஹிஸ்புல்லா

இன்று (03.02.2019)வெளியான வீரகேசரி பத்திரிகையினுடைய முன் பக்க தலைப்புச் செய்தியில் இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க கூடிய வகையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பான மறுப்பறிக்கையினை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

மேற்படி பத்திரிகை குறிப்பாக தமிழ் பேசும் மக்களினுடைய  பத்திரிகையாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான கிழக்கில் வாழ்கின்ற முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான இன முறுகலை மேலும் தூண்டுகின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். என குறிப்பிட்ட அவர்,

குறிப்பாக கடந்த மாதம் நான் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கபட்டதையடுத்து இனங்களுக்கிடையில் எந்த விதமான பாகுபாடுமற்ற கிழக்கில் இருக்கின்ற இன விகிதாசார அடிப்படையலான முறையில் எனது சேவை அமைய வேண்டுமென்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றேன். அந்த அடிப்படையில் கடந்த வாரம் கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற உயர் பதவி வெற்றிடங்களுக்கு குறிப்பாக விகிதாசார அடிப்படையில் தமிழ் பேசும் மக்களினுடைய இரண்டு பிரதிநிதிகளையும் முஸ்லீம்களுக்கு இரண்டு பிரதிநிதிகளையும் சிங்கள சகோதர இனத்தவர்களுக்கு ஒரு பிரதிநிதியுமாக ஐந்து உயர் பதவிகளுக்காக நான் நியமித்திருந்தேன்.இதில் அதி உயர் பதவியாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆனைக்குழு தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் சிபாரிசின்  அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்  பேராசிரியர் "தங்கமுத்து ஜயசிங்கம்"அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

இதை அடுத்து இன்னும் ஒரு பிரதிநிதியை மாகாண போக்குவரத்து சபையின் தலைவர்" ஹரிதரன்" அவர்களுக்கு வழங்கி இருக்கின்றேன்.
அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் சிங்கள சகோதர்"நளின்" முஸ்லீம்கள் சார்பாக உதுமாலெப்பை மற்றும் சுபையிர் இருவருக்குமாக உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று அப் பதவிகளுக்கு இயக்குனர் சபையிலும் உறுப்பினர்களுக்கான பதவிகளை விகிதாசர அடிப்படையிலேயே கொடுத்துள்ளேன்.
இது தொடர்பாக ஊடகங்கள் தெளிவாகவும்,ஆதாரபூர்வமாகவும் செய்தியினை வெளியிட வேண்டும். 

தமிழ் பேசும் மக்களுடைய தனித்துவ ஊடகமான வீரகேசரி பத்திரிகை இந்த செய்தியை வெளியிடும் முன் என்னையோ அல்லது எனது செயலகத்தையோ தொடர்பு கொண்டு இருக்கமுடியும் அல்லது தகவல் அறியும் சட்டமூலத்தின் அடிப்படையில் தகவல்களை திரட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயற்படாமல் இனரீதியாக முறுகலை ஏற்படுத்தக்கூடிய செய்தியை வெளியிட்டமைக்கு நான் கவலையடைகிறேன். இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் செய்ய முற்படும் போது தெளிவினைப் பெற்று செயற்பட வேண்டும் என்று ஆளுனர் தனது மறுப்பறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.

5 கருத்துரைகள்:

Why not he sue this newspaper? This is the very same media which published the news of Gnanasera Thero’s jail sentence as “Eid gift to Muslims” and Muslim leaders failed to sue the paper then.

Virakesari is Pro-RSS indian media now a days......so Just forget it...
You can see in Virakesari....Glamour news anywhere in the world corners, Indian any corners news, most of them from any Facebook or any website's news... Also, their Tamil writing is very poor

என்னைக்குத்தான் இந்த வீரகேசரி முஸ்லிம்கள் பற்றி சரியான கண்ணோட்டத்தில் எழுதியிருக்கின்றது. தமிழ்ப் பயங்கரவாதிகளை தமிழ்ப் போராளிகள் என்றும் வீதியில் காற்று வாங்கச் செல்லும் முஸ்லிம் ஒருவரை முஸ்லிம் பயங்கரவாதி என்றும் எழுதுபவர்களே அவர்கள். ஆளுனர் ஹிஸ்புழ்ழா அவர்கள் எப்படித்தான் தமிழர்களைச் சேர்த்து நடாத்தினாலும் இனவெறிச்சாயத்தைப் பூசவே செய்வர். அதுபற்றி நாங்கள் கவலையேபடத் தேவையில்லை.

Sue the newspaper? do you think that the courts and legal system are belongs to your family? In order to sue against a written articles in a news paper you need valid proof/evidence. Otherwise only you can bark in your street.

Of course, Mr. Kumar. Not only in Sri Lanka but also worldwide, we must submit evidence for every prosecution. But human has conscience. A human behaving without conscience, he is waste than a barking stray dog. Medias like Veerakesari and Thinakural, and also many others even on-line (news)papers, when they undermined Muslim Community for no reason, where were you guys sitting. While Karuna was heading for very much assassinations Team in East and killing thousands of Muslims and looted their properties where you sitting, man. Very much Tamils are very clear minded. Peace loving people, soft-hearten, and have honey in their tongues. Why you little people behaves against to the humanities?

Post a Comment