Header Ads



அமைச்சரவையில் ரணிலுக்கு ஏமாற்றம் - மைத்திரியும், சம்பிக்கவும் கால அவகாசம் கோரல்

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கிய விவாதம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் இந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரியிருக்கிறார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த ஆணைக்குழு முன்பாக தமது குற்றங்களை ஒப்புக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

எனினும், இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள நிலையிலேயே, இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய கால அவகாசம் கோரியிருந்தார்.

2015ஆம் ஆண்டிலும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.