Header Ads



கொள்ளுப்பிட்டியில் பிடிபட்ட போதைப்பொருள், எங்கிருந்தது வந்தது...?

நாட்டில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள், துபாயிலுள்ள இலங்கையில் பாரிய ​போதைப்பொருள் கடத்தல்காரரினால் தெற்காசிய நாடொன்றின் மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டலில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான மாகந்துரே மதூஷின் குழுவுக்கும் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌிநாட்டில் தங்கியுள்ள இலங்கை கடத்தல்காரர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளுப்பிட்டி, வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, சிறிய ரக வேன்கள் இரண்டில் இருந்து 294 கிலோ 490 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதைப்பொருள் 3,533 மில்லியன் ரூபா பெறுமதியுடையதாகும்.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை தடுத்துவைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு நேற்று நீதிமன்றம் அனுமதியளித்தது.

No comments

Powered by Blogger.