Header Ads



நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, குற்றவாளியாவாரா விக்னேஸ்வரன்..?

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக டெனீஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை மீண்டும் அமைச்சராக பணியாற்ற அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும், டெனீஸ்வரனை அமைச்சராக செயற்படுவதற்கு விக்னேஸ்வரன் அனுமதிக்கவில்லை.

இதனால், நீதிமன்ற உத்தரவை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவமதித்து விட்டார் என, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என, விக்னேஸ்வரன் தரப்பில் எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகியோர் இன்று, இந்த எதிர்ப்பு மனுவை நிராகரிப்பதாக அறிவித்தனர்.

இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.