Header Ads



பாகிஸ்தான் ராணுவத்துக்கு, புகழாரம் சூட்டிய ஷாகித் அப்ரிடி


இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கும் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி ட்விட்டரில் பதிவிட்டுருக்கிறார்.

புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் இது போன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். புல்வாமா தாக்குதலுக்குப் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியபோது, அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், ''விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகவே இப்படிப்பட்ட வேலைகளைச் செய்துவிட்டு பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஒருவேளை பாகிஸ்தான் செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பியுங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.

பாக்., பிரதமரின் கருத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான ஷாகித் அஃப்ரிடி ' பிரதமர் இம்ரான் முற்றிலும் தெள்ளத் தெளிவாகப் பேசியிருக்கிறார்’ என்று எனக் குறிப்பிட்டுருந்தார். இது இந்தியாவில் இருக்கும் அஃப்ரிடியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய விமானப் படை விமானி அபினந்தனின் வீடியோவைப் பதிவிட்ட அஃப்ரிடி  ``பாகிஸ்தான் ராணுவப்படையை நினைத்துப் பெருமைக் கொள்கிறேன். எங்கள் எதிரிகளையும் இப்படிதான் கணிவுடன் நடத்துவோம். இந்தியாவால் தொடங்கப்பட்ட இந்த போர் இப்போது முடிவுக்கு வர வேண்டும். நாங்கள் அமைதியை விரும்பும் நாடு. இதற்கு ஒரே தீர்வுப் பிரதமர் இம்ரான் கான் கூறியது போல் இருநாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே’’ என்றுக் குறிப்பிட்டுள்ளார். 

8 comments:

  1. காமேடி?.
    பயங்கரவாத நாட்டை அமைதி நாடு என்கிறாரு.
    அல்லாவிட்டால் “அமைதி” என்றால் என்னவென்று தெரியாது போல.
    உங்கட அமைதி நாட்டுக்கு ஏன் ஒருவரும் கிறிக்கட் விளையாட கூட வருவதில்லை?

    ReplyDelete
  2. அப்படி பார்த்தால் , இந்தியாவின் RSS குழுவினரும் பங்கரவாதிகளே ஆகையால் இண்டியாவ்னுக்கும் இதே பதிலடி கொடுக்க வெண்டும்.. முதலில் எல்லோரும் கவனத்துக்கு எடுக்க வெண்டியது என்ன வென்றால் , ஒரு நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகள் அந்நாட்டு அரசோ , மக்கள் ஆடரவளிப்பது கிடையாது, இலங்கையில் LTTE தமிழர் என்பதால் முழு இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் Ltte என கூறுவது எப்படி? இந்தியாவின் முட்டாள் தனமான செயல்களினால் அப்பாவி மக்கள்தான் கொள்ள படுவார்கள்.

    ReplyDelete
  3. அப்படி பார்த்தால் , இந்தியாவின் RSS குழுவினரும் பங்கரவாதிகளே ஆகையால் இண்டியாவ்னுக்கும் இதே பதிலடி கொடுக்க வெண்டும்.. முதலில் எல்லோரும் கவனத்துக்கு எடுக்க வெண்டியது என்ன வென்றால் , ஒரு நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகள் அந்நாட்டு அரசோ , மக்கள் ஆடரவளிப்பது கிடையாது, இலங்கையில் LTTE தமிழர் என்பதால் முழு இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் Ltte என கூறுவது எப்படி? இந்தியாவின் முட்டாள் தனமான செயல்களினால் அப்பாவி மக்கள்தான் கொள்ள படுவார்கள்.

    ReplyDelete

  4. ​அஜன் அண்ணா, காலைல டாப்லெட் போடல்லையா? குயிக்கா போட்டு தண்ணிய குடிங்க அண்ணா ​

    ReplyDelete
  5. ya this is modi's political act.

    ReplyDelete
  6. Yes, Ajan, Pakistan is a peace loving country but not a peaceful country because of India. In Pakistan 3% Hindus living peacefully and enjoy every right as of others and even Chief justice too given to them. But in India, 12% of Muslims and so-called low cast are treated as badly as possible. Beefeaters are killed while the biggest exporter of beef is India and owners are Upper caste Hindus.

    India never wants a peaceful Pakistan or peaceful neighbor. It wants trouble neighbor to fish in troubled water to which they use thousand of disguised agents to create an artificial problem.it is called cross border terror of India. It is one of them is this attack on the Indian army. Another big Indian terror event is attacked on Srilankan team. Al Jazeera reported that it is planned in India. It is India's plan to isolate Pakistan from sports and other international activities. After that foreign countries refused to play in Pakistan. But the culprit is India. Same is done(killed own forces) for Election as Modi know his imminent defeat to change the voters mind. The explosive used in this attack is used by Indian army, so how such powerful explosive gone into the hands of terrorist?

    ReplyDelete
  7. அஜன் உங்க இனவாத பேச்சுக்கள குறைந்துக் கொள்ளுங்க!!!
    சிந்தித்து கொமன் பன்னுங்க

    ReplyDelete
  8. அஜன் உங்க இனவாத பேச்சுக்கள குறைந்துக் கொள்ளுங்க!!!
    சிந்தித்து கொமன் பன்னுங்க

    ReplyDelete

Powered by Blogger.