Header Ads



மஹிந்த - மைத்திரி உறவில் லடாயா...?


மஹிந்த – மைத்திரி கூட்டில் இணக்கமின்மை நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டு ஒன்றை அமைத்து அதன் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவேண்டும் என்பதே மைத்திரியின் விருப்பமாகும். இதனை அவர் மஹிந்த ராஜபக்ச தரப்புக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் இதற்கு இன்னும் மஹிந்த ராஜபக்ச உடன்படவில்லை. ஏற்கனவே ராஜபக்சர்களின் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதாக மைத்திரி அளித்த உறுதிமொழி தற்போது தகர்ந்துப்போயுள்ளது.

தமக்கு எதிரான அரசாங்க நிதி முறைக்கேடு வழக்கில் கோத்தபாய தாக்கல் செய்த மனுவை மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதி நிராகரித்து விட்டனர்.

எனவே இந்த வழக்கு விசாரணை நிச்சயமாக மைத்திரி- மஹிந்த உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்; ஜனாதிபதி 2019 டிசம்பர் 9ஆம் திகதி பதவியேற்பார் என்று பெசில் ராஜபக்ச கூறியிருப்பதும் மஹிந்த – மைத்திரி உறவில் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.

No comments

Powered by Blogger.