Header Ads



யாழ் முஸ்லிம்களின் வீட்டுத்திட்டத்தை, வெற்றிகரமாக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும் - றிசாட்

- பாறுக் ஷிஹான்  -

யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சகல தரப்பினரையும் உள்வாங்கும் யோசனை வெற்றியடைந்துள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(14) இரவு யாழ் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் பள்ளிவாசல் நிர்வாகத்தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பை அடுத்து இவ்யோசனையை அமைச்சர் முன்வைத்ததுடன் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

குறிப்பாக இதுவரை யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் நீண்ட கால பிரச்சினையாக இருந்த வீடமைப்பு குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக அமைச்சர் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு உத்தரவுகளை பிறப்பித்ததுடன் இவ்வீட்டுத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு அரசியல் பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் குறித்த  வீடமைப்பு விடயத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் எடுத்தக்கொண்ட முயற்சியை பாராட்டினார்.

மேலும் இத்திட்டத்தை  சில தினங்களில் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது




3 comments:

  1. It is great news ..
    I hope that people in some other area too do this type of housing .

    ReplyDelete
  2. By looking at the pictures, it seems there are some, who were convicted before for illegal land grabbing and accused of drug trafficking are involved in these projects. Extreme care should be taken to make sure the allocated money is used entirely to these housing projects and to prevent the cash flow going to the hands of these criminals

    ReplyDelete
  3. முதலில் கட்டுங்கள், எப்படி பங்கிடுவது என பிறகு யோசிப்பம்

    ReplyDelete

Powered by Blogger.