Header Ads



ராஜபக்ச குடும்பத்தில் எவர், களமிறங்கினாலும் தோற்கடிப்போம் - சஜித்

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்பம் எமக்கு சவால் அல்ல. அக்குடும்பத்தில் இருந்து கோத்தபாயவோ, பஸிலோ அல்லது சமலோ களமிறங்கினால் நாம் தோற்கடிப்போம்.

இனிமேல் நடக்கும் எந்தத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதி என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி பல கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியாகத் தற்போது திகழ்கின்றது. இனிமேல் இந்தக் கூட்டணி ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ எம்மை வீழ்த்தலாம் என்று கனவிலும் கூட இனிமேல் நினைக்கக்கூடாது. எங்கள் பலத்தை

எவராலும் அசைக்க முடியாது. எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்கவும் முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உன்னை முதலில் முஸ்லிம்கள் தோற்கடிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். உன் அப்பாவின் பாசிச குணம் உன்னிடம் சற்றும் குறையாமல் நயவஞ்சகமாக மறைந்துள்ளது

    ReplyDelete

Powered by Blogger.