Header Ads



நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளைத் திறக்க, வேண்டுமென்றதும் என்னை தாக்க ஆரம்பித்தனர்

நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளைத் திறக்க வேண்டுமென்று நான் கூறியதும் என்னை தாக்க ஆரம்பித்தனர் என மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

நாம் மேல் மாகாணத்தில் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்க உள்ளோம். இதில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து  கல்வி கற்பர். இதனால் புரிந்துணர்வு, இன ஐக்கியம் ஏற்படும்.

சகல சமயத்தினர்களும் கல்வி கற்கும் முன்மாதிரிப் பாடசாலைகளை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.

பாணந்துறை, அம்பலாந்துவையில் இடம்பெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின்  பிரச்சினைகளை ஆராயும் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

சகல சமயத்தவர்களும் கல்வி பயிலும் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.  திட்டமிட்ட முஸ்லிம் பாடசாலையை அமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாம் மேல் மாகாணத்தில் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்க உள்ளோம் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. மிஸ்டர் ஆசாத் சாலிஹ் நீங்கள் முனமாதிரி பாடசாலையை அமைத்து அனைத்துமத மாணவர்களும் படிக்கும்போது என்ன பாஷையில் பாடங்கள் நடத்தப்படும் சிங்களமொழியிலா அல்லது தமிழ்மொழியிலா அல்லது ஆங்கிலம் மொழியில்?அல்லது அனைத்துபாடங்களையும் மூன்று மொழியிலுமா?இதையொட்டி மொழிரீதியான பல கேள்விகள் இருக்கின்றன ஏதாவது உங்களுக்கு புரிகின்றதா யாருமே தன் தாய்மொழி இந்த நாட்டில் அழிந்துவிடக்கூடாது என்றுதான் சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்!உங்களின் முன்மாதிரி பாடசாலைகளில் மொழிக்காக எத்தனை பிரச்சினை நடந்தேருமோ தெரியாது?

    ReplyDelete
  2. What is in the vessle will come in the spoon...

    ReplyDelete
  3. மிஸ்டர் ஆசாத் இலங்கை முஸ்லிம் நாடா நாம் நினைத்த நேரத்தில் வேண்டியதை மாற்றி அமைப்பதற்கு?

    அரபு நாடுகளில் நோன்புகாலத்தில் பாடசாலைகள் நடைபெருகின்றது என்று கூறியிரிந்தீர் நாமும் இலங்கையில் நம் முஸ்லிம் பாடசாலைகளை நடத்த பேக்கயன் சிந்தனை சொன்னீர் புத்திஜீவிகளால் நல்ல பாடம் புகட்டப்பட்டீர்!

    உங்கள் இந்த பேக்கயன் சிந்தனைக்கு அரசாங்கம் அனுமதிதந்து அந்த விடயம் முஸ்லிம்மாணவர்களுக்கு கஸ்டமாகி விட்டால் மீண்டும் நமது நோன்பு வணக்கத்திற்காக நம் மூதாதயர்கள் கஸ்டப்பட்டு முஸ்லிம்களுக்கா உருவாக்கிக்கொண்ட இந்த சலுகையை யார் மீட்டித்தருவது?!தற்போதய நமது இலங்கை நாட்டில் இஸலாம் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு அதற்கு எதிராக இனவாதம் தூண்டப்படும் நிலையில் எவ்வாறு நாம் நமக்கென்று ஒரு சிறப்பு சட்டம் இந்த சமூகத்தில் பிச்சை கேட்பது? நன்றாக சிந்திக்க தெரியாவிட்டால் தெரிந்தவர்களை தேடி அவர்களிடம் கேட்டுக்கொள்ளவும்

    ReplyDelete
  4. உண்மையிலே.................. இந்த பேக்கயனுவள ஆளுனரா ஜனாதிபதி நியமித்தபோதே நினைச்சேன்................ ஜனாதிபதி என்னமோ காய் நகர்த்தப் போறார்னு............. இப்போ டவுட் கிளியர்..............இந்த பேக்கயனுவளு வச்சு முஸ்லீம்கள கருவருக்கப்போற விசயம்.................

    ReplyDelete
  5. Mun irnda thaleivarkal poraadi petrrukondaye ivar than sonda araasial kaaga kaati kudukkarar endu enku mattama thuonudu.....?

    ReplyDelete

Powered by Blogger.