Header Ads



முஸ்லிம் சமூகத்தின் அவசர கவனத்திற்கு, இல்லையேல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆபத்து

தொல்லியல் , முஸ்லிம்களுக்கு தொல்லை தருகின்றதா...?

தொல்லியல் (Archeology) சார் பிரச்சினைகள் இன்று முஸ்லிம் சமூகத்தில்  #மையமான_பிரச்சினையாக மாறியுள்ளது,  அண்மைக்கால,#தென்கிழக்கு_பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர் கைதின் பின்னர், இலங்கைத் தொல்லியல் துறையும் அதுசார் சட்டம், நிர்வாகம் என்பனவற்றின் மீது பலரும் தமது குற்றச்சாட்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர், ஆனால் குறித்த விடயம் ,எந்தளவு ஆழமானது ,அதில் எமது, கடந்தகால, எதிர்காலப் பங்களிப்பு என்ன என்பது தொடர்பான பதிவே இதுவாகும்

#தொல்லியல்_துறை, 

இலங்கைத் தேசத்தின் புராதன மரபுகளையும், அதன் நீட்சியையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு துறையாக இதனைக் கருத முடியும், இலங்கையில் 1890ல் உத்தியோக பூர்வமாக, இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, தொல்லியல் திணைக்களத்தின்  முதலாவது சுதேச  இலங்கைப் பணிப்பாளராக கலாநிதி ,எஸ் ,பரணவிதாரண உள்ளார், இலங்கையில் 250000,க்கும் மேற்பட்ட தொல்லியல் சார் இடங்கள் உள்ளன, ஆனால் அதில் சிறிய ஒரு பகுதியே, ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன, இன்னும் பல ஆய்வுகள் #எதிர்காலத்தில் இடம்பெற உள்ளன.

#சட்டங்கள்,

தொல்லியல் சட்டங்கள் , மிகவும் இறுக்கமானவை, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமே, குறித்த துறையில் அதிக அதிகாரம் உடையவர்,1998ம் ஆண்டின் 4ம் இலக்கச் சட்டப்படி,பணிப்பாளரின் நடவடிக்கைகளில்,நீதி மன்றைத் தவிர, எந்த ஒரு நபருக்கும் தலையிட முடியாது,, இதில் பாரபட்சங்களுக்கும் ,இடமிருக்கலாம்...

#முஸ்லிம்களும்_தொல்லியலும்,

தொல்லியல் துறை, காலனித்துவ வாதிகளால் ஆரம்பிக்கப்பட்டாலும், தொல்லியல் துறையின் ஒரு பிரிவான, #இரசாயனப்பகுதி, மிக முக்கியமானது, அதன்மூலமே,ஓவியம், சிற்பம், போன்ற குறித்த துறையின் நீட்சியைப் பாதுகாக்க முடியும், அதன் தோற்றுவிப்பாளர் ஒரு #முஸ்லிம், என்பது மிக முக்கியமான அம்சம்,  அதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம்,?

#கான்பகதூர்_முஹமட்_சனாஉல்லா

இந்திய தொல்லியல் துறை இரசாயனவியலாளரான(Archeological Chemist) இவர் உலகப் புகழ்மிக்கவர்,புராதன நாகரீகங்களான, ஹரப்பா, மொஹஞ்சதேரோ, போன்றவற்றை ஆய்வு செய்தவர், 1940 ல் இலங்கை சீகிரிய ஓவியங்கள் பலவீனமடைந்தபோது, அதற்கான சிறப்பறிஞர்கள் இலங்கையில் எவரும் இருக்கவில்லை, 1943 January 27 ம் திகதியன்று இலங்கை வந்து அழிவடைய இருந்த புராதன ஓவியங்களை தனது அறிவையும், முயற்சியையும் கொண்டு, பாதுகாத்தார், 

அத்தோடு, #தொன்_அம்றூஷ் என்ற, ஆங்கிலேயரையும், குறித்த இரசாயனவியல் துறைக்காகப் பயிற்றுவித்தார், அதுவே தொல்பொருள் திணைக்களத்தின் இரசாயனப் பாதுகாப்புப் பிரிவின் ஆரம்பமாகும், அதற்கான முழுப்பங்களிப்பையும் செய்தவர் #சனாஉல்லாகான் ,என்ற முஸ்லிம் என்பது பெருமைக்குரிய விடயமே, 

பின்னர், இந்திய தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின் 1947 ஏப்ரல் 13ம் திகதி மீண்டும் இலங்கை வந்து இலங்கையின் சுவரோவியங்களான #பொலன்றுவை, #லங்காதிலக்க,#கல்விகாரை, #புள்ளிகொட,#ஹிந்தகல,போன்ற இந் நாட்டின் மிக முக்கிய புராதன தலங்களைப் பாதுகாக்கும் பணியில் முழுமையாக தன்னை  அர்ப்பணிப்புச் செய்தார்,  

அந்த வகையில் இலங்கையின் , தொல்லியல் துறைசார், சிற்பங்களுக்கும், ஓவியங்களுக்கும் பணி புரிந்தது டன், குறித்த #இரசாயனத்துறை_பிரிவு இன்றுவரை இயங்குவதற்கு காரணமாக அமைந்தவர் Khan Bahatur Mohammed Sanaullah அவர்களே ஆகும், 

 ஆனால் பிற்கால முஸ்லிம் சமூக, சமயத்  தலைவர்களும், சமூகமும் இத்தொடர்ச்சியை புறக்கணித்து விட்டிருந்தனர்,ஓவியங்கள்,மற்றும்,சிற்பங்கள் பற்றிய பிழையான சமய வியாக்கியானங்களும், புரிந்துணர்வும்,  இதற்கான காரணங்களில் உள்ளடங்கும்,, அதன் விளைவே இன்றைய பல சிக்கல்களுக்கான அடிப்படையாகவும் அமைகின்றது,

இன்றைய பிரச்சினைகளும், எதிர்வு கூறலும்,, 

இலங்கையில்  கிழக்கு,வடக்கு, யுத்தம் முடிவடைந்த பின்னர், எதிர்கொள்ள இருக்கும் அடுத்த யுத்தம் #கலாசார_மோதலே (Cultural War) ஆகும், அதன் ஒரு வகையே இந்த தொல்லியல் தொடர்பான பிரச்சினைகள், இதில் எதிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது  இலங்கை முஸ்லிகளே ஆகும், 

ஏனெனில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், வாழ்தல்,மட்டுமல்ல தமக்கான புராதன தொல்லியல் அடையாளங்களான, பழைய பள்ளிகள், குடியிருப்புக்கள், சியாரங்கள், ஆவணங்கள், போன்ற இன்னும் பலவற்றை அழித்து விட்ட #வெற்று_சமூகமாகவும் காணப்படுவதும், இன்னொரு காரணமாகும், எனவே தான் ,குறித்த தொல்லியல் சட்டத்தின் மூலமும், அதன் அகழ்வின் மூலமும், எதிர்காலத்தில், இன்னும் பல பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என்பது எனது எதிர்வு கூறல், 

#பாரதூரமும்,,#பாரபட்சமும், 

குறித்த தொல்லியல் துறை ,பாரபட்சமானது என்ற குற்றச்சாட்டை பலரும் குறிப்பிட்டாலும் அதன் உருவாக்கத்தின் போதும்,  இன்றும்,அத்துறை சார் ஈடுபாட்டிலும், கவனமெடுக்காது,அதன் பாரதூரமமும்  விளங்காது பாராமுகமாக இருந்தது ,இருப்பது தமிழர்,முஸ்லிம் அரசியல்வாதிகளையும், சமூக, சமயத் தலைவர்களையுமே சாரும் என்பதையும் நாம்  ஏற்கத்தான் வேண்டி உள்ளது, 

உதாரணமாக,  தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினை, #பௌத்ததூபியை  மட்டுமே, அடையாளமாகக் கொண்டுள்ளது, இது முழு நாட்டின் புராதனத்தினதும், மரபினதும், அடையாளமாகக் கொள்ளக் கூடியதா??? அவ்வாறாயின் அச்சட்டம் இயற்றப்படும் போது, அரசியல் வாதிகள் எங்கே இருந்தனர்,,???? என்பதும் கேட்கப்பட வேண்டிய வினா. மட்டுமல்ல சிலைகளையும், ஓவியங்களையும் சமய நோக்கில் புறக்ணித்து, தப்பான வியாக்கியானம் வழங்கிய #இயக்கவாதிகள், , இன்றைய பிரச்சினைகளுக்கு முன் வைக்கும் தீர்வுகள்தான்  என்ன?..

இன்றும் கூட குறித்த துறையில்  முஸ்லிம் ஆளணி பற்றாக்குறை, மற்றும் புராதனம் பற்றிய முஸ்லிம்களின்  பிற்போக்கு மனநிலை போன்றனவும் இவ் விடயங்களை இன்னும் சிக்கலாக்கி உள்ளன, இதிலிருந்து அவசரமாக முஸ்லிம் சமூகம் மீள வேண்டும், 

#என்ன_செய்யலாம்??

1. அவசரமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட வேண்டும்,

2.முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்பவோ,அதிகமாகவோ, ஆர்வமுள்ளவர்களோ ,தொல்லியல் துறை சார் தொழில்களில் இணைய முடியும், 

3. தமது சொந்த ,புராதன அழிப்பு ,கவனக்குறைவு, போன்ற பிற்போக்கு சமய  மன நிலையில் இருந்து மீளல்,

4. முஸ்லிம்களுக்கே உரித்தான, தனித்துவமான பள்ளிவாசல்கள்,,சியாறங்கள், ஆவணங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள சமயம்சார், சமூகம்சார் அமைப்புக்கள் முன்வர வேண்டும்,

மேற்படி விடயங்களில் அனைவரும் அவசரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடத்து, #கிரலகல மட்டுமல்லாமல் , எதிர்காலத்தில் ஒவ்வொரு ஊர்களையும்,,வீடுகளையும் இச்சட்டம், வந்து கதவைத் தட்டும் என்பது , நிச்சயமான ஒன்று, எனவேதான், ஒரு பௌத்த பெரும்பான்மை நாட்டில் வாழும் புரிந்துணர்வுமிக்க சிறுபான்மையாக வாழ முடியுமான ஆக்கபூர்வமான ,கலந்துரையாடல்களிலும், எதிர்காலத்திட்டங்களிலும் அவசரமாக ஈடுபட வேண்டியது, இன்றைய அவசர பணியாகும்,

"#சிந்திப்போம்,  #தேசப்பற்று #மிக்க #சிறந்த #சமுதாயத்தைக் #கட்டமைப்போம்,"

Mufizal Aboobucker
Senior Lecturer 
Department of Philosophy 
University of Peradeniya

3 comments:

  1. தமக்கு சார்பாக மட்டும் சிந்திக்கின்ற சில முஸ்லீங்கள் இக்கட்டுரை மூலம் படிப்பினை பெறட்டும். நன்றி விரிவுரையாளர் அவர்களே.

    ReplyDelete
  2. This not a solution..
    The solution is to educate all communities from basic to university level about the culture; religion and customs of all Sri Lanka ..make a comparative religion a must to all.
    Today; may about archaeology; tomorrow may be some be some thing else ..
    So; educate the children all communities a about this..include all this in school syllabus. ..
    No point in academic discussion alone.
    No point in including into university syllabus

    ReplyDelete
  3. Sir uggaludaya muyachiku manamartha nanrihal. Kuripa Muslim kal mathila archaeological department samathama ma theliwu illa sir athu mattum illa muslMus samuham archaeological department la work pannura aakalayum periya alawila mathichu nadakura illa ana ithe wera department kal work pannura aakaluku Muslim kalla mathila Nalla mathipu Mariyathaum . Athanalathan itha department Ku Muslims work Ku warathu kuraiwu appadi wanthalum thodathu department la irukura illa wittu idamatram eaduthu poiduwaga. Athoda tholl porul sattam sammathamana thiliwana wilakagal nammada thamil pesum samuhathudathil illai. Samuhathitku athanai koorinal samooham nambawum thayar illa. Kurippaha kooduthalana paditha samoohathinarum akkarayatu ealanamaha irukurarhal.tholllliyal samathamahaha natil 3 sattamoolagal nadaimuraiyil ullathu. Awatril 2 sattagal mihawum kadumayanathahuhum Karan thlliyal sattathin keel kaithu saiyyapattal naam kutrawaliyahawo allathy kutramatrawaraha iruthalum eakkaram kondum eatha woru neethi manralum pinai walaga mudiyathu.karana tholliyal panippalar nayahathin mudiwea iruthi mudiwaha Amayum athanpadiyea neethimanram theerpu walagum. Panipalar nayaham mudiwu perumbalum mawatta uthawi panippalarhalin mudiwai othathahawea irukum . Ilagayai poruthamattil owwaru mawattathilum tholliyal thinaikalam kanapadukirathu mawatta panippalar halum ullanar aanal awarhal anaiwarum perumbanmai inathai serthawarhal. Athu awwaru iruka 1% mana musliM samoohathinar kooda kuritha thinaikalathil welai saiyawillai eanpathu kawalaikkidamana unmai.

    Kuritha thinaikalathil welaisaiyyum Muslim oliyar

    ReplyDelete

Powered by Blogger.