Header Ads



ஞானசாரரை எதிர்க்கும் இந்துக்கள், இந்நாட்டில் சாதிக்கப்போவதுதான் என்ன..?

நாட்டின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் இலங்கையின் இருபெரும் தேசிய இனங்களான சிங்களவர்களும் தமிழர்களும் இரு துருவங்களாக வேறுபட்டு பரஸ்பரம் துவேஷ உணர்வுடன் பார்க்கும் நிலையே தொடர்கின்றது. 

ஞானசாரதேரர் போன்ற பிரபலமான ஒரு பௌத்த செயற்பாட்டாளர் சிக்கலில் உள்ள போது இந்துக்கள் குரல்கொடுக்கின்றார்கள் என்றால் இது சிங்கள மக்கள் மத்தியில்  எந்தளவு உயரிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் என சிந்திக்க வேண்டும். 

ஞானசாரரை எதிர்க்கும் இந்துக்கள் இந்த நாட்டில் சாதிக்கப்போவதுதான் என்ன? எம்மைப்பொறுத்தவரை இந்த நாட்டில் எமது அடுத்த சந்ததியினர் சிங்களவர்களுடன் அமைதியான முறையில் வாழவேண்டும் .அதற்கான பலமான அடித்தளத்தையே நாங்கள் அமைக்கின்றோம் என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கோட்டை ரயில்நிலைய முன்றலில் இலங்கை இந்து சம்மேளனத்தின் சார்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

5 comments:

  1. Civilized man respect the law and order.no one is above the law.He was convicted for insulting the judiciary and court of law.He is criminal disguised as a monk and doing every meanest thing.There were so many cases against him including dunk driving and accident.

    This man say supporting Gnasara will increase the image of Tamils among Sinhalese. But having killed bus load of monk,soldiers and civilians and asking for separation from Sinhala community asking to release a criminal for national unity is ridiculous.If you want friendship and co-existence and real peace,stop your ealam dream of north Srilanka. tolerate other cultures and religion.

    Law loving people,lawyers association too opposed to release him and wrote president not to do that.Any body, who support criminal and interfere in law and justice, cannot be decent man but criminal.

    ReplyDelete
  2. 100% true. We shoukd join hand together with them and protest till he release.

    ReplyDelete
  3. அட தட்டயன் நீ ஆதரித்து என்னத கிளிக்க போராய் திரும்பவும் உதை வாங்கவா போராய்

    ReplyDelete
  4. எமது நாட்டின் நீதியரசர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். அவர்கள் இத் திகதிவரை நீதிக்கு எதிராக தீர்ப்புக் கொடுத்திருக்கின்றார்களா எனற வினா எழும்புமானால் அதற்கு பதில் இல்லை என்பதே ஆகும். ஆயினும் ஒரு சிறு கருத்தை இங்கு சொல்லாமல் இருக்க முடியாது. சர்வதேச நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் வெறும் சட்டப் புத்தகங்களை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொடுக்கப்படுவதில்லை. அத்தோடு முன்னைய similar வழக்குகளை விசாரித்த பிரபல நீதியரசர்கள் எப்படியான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள் என்ற விடயங்களும் சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்கப்படும். தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் தீர்ப்பினை மறுசீரமைப்பது பிறிதொரு குற்றவாளிக்கு சாதகமாகிவிடலாம் என்ற வாதபிரதிவாதங்களும் நன்கு பரிசீலிக்கப்படும். நாட்டின் தலைவர் அவர்கள் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனையை revalidate பண்ணும் சமயத்தில் எழுந்தமானத்தில் செய்ய மாட்டார். அவருக்கும் எத்தனையோ Procedures இருக்கின்றன. நீதித்துறையில் நன்கு தேர்ச்சி பெற்ற ஆலோசகர்கள் இருப்பார்கள். பல விடயங்களும் சீர்தூக்கிப்பார்க்கப்படும். எனவே நாங்கள் இவ்விடயங்களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதனால் எந்தவித பிரயோசனங்களும் ஏற்படப் போவதில்லை. Jutice knows nobody.

    ReplyDelete
  5. Most of the sinhalese don't care this thero because i am working sinhala area last 21 years.

    ReplyDelete

Powered by Blogger.