Header Ads



யானைகள் இன்று, அவசரமாக கூடுகின்றன

(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்க்குழு கூட்டம் அவசரமாக இன்று -27- கூடுகின்றது. 

இந்த செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

விசேடமாக  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு அதற்கான ஒத்துழைப்புக்களையும் இலங்கை வழங்கி வந்திருந்தது. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது. 

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரைகாலமும் இலங்கையினால் இணை அனுசரணை வழங்கி வந்த குறித்த தீர்மானங்களிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் அறிவித்திருந்தார். 

இவ்விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் கட்சி ரீதியில் ஆராயப்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.