Header Ads



முஹம்மட் ஷிராசும், சமூகத்துக்கு தேவையான "இம்டியாஸ் நானா" க்களும்..!

இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு தெரிவாகியுள்ள முஹம்மட் ஷிராசுக்கு ஒரு பாராட்டுவிழா அண்மையில் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அந்த நிகழ்வில் உரையாற்றிய ஷிராஸ் தனது பெற்றோர், கோச், ஆசிரியர்கள், குடும்பத்தினர் என்று எல்லோருக்கும் நன்றி சொல்லுவார்.

அந்த நன்றிகளின் இடையில் "இம்டியாஸ் நாநா" என்று ஒருவர் பற்றி ஷிராஸ் பேசியிருந்தார்.

"ஆரம்ப காலங்களில் என்னிடம் விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள் இருக்கவில்லை.  எனக்குத் தேவையான பாதணி, மற்றும் ஆடைகள் போன்றவற்றை இம்டியாஸ் நாநாதான் வாங்கித் தந்தார்"

என்னைப் பொருத்தவரையில் ஷிராசின் வெற்றியில் இந்த இம்டியாஸ் நாநாவின் பங்களிப்புதான் மகத்தானது.

சமூகத்துக்கு தேவை, இப்படியான இம்டியாஸ் நாநாக்கள்தான்.

ஒருவன் ஒரு இடத்துக்கு வந்த பிறகு உறவு கொண்டாடவும், உரிமை கோரவும் ஆயிரம்பேர் வருவார்கள் 

ஆனால் கஷ்டப்படும்போது தோள்கொடுக்க, இப்படியான இம்டியாஸ் நாநாக்கள்தான் வருவதில்லை

இம்டியாஸ் நாநாவுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

- Safwan Basheer -

1 comment:

  1. May Allah Bless you both. Keep the good Name of Islam always with you.

    ReplyDelete

Powered by Blogger.