February 11, 2019

ஒபரேஷன் செய்யலாமா? வீட்டிலே பிரசவம் பார்க்கலாமா? வக்சீன்களால் பாதிப்பா?

இது ஐரோப்பா இருண்டு கிடந்த அன்றைய  நாட்கள். அறிவியல், விஞ்ஞானம் என்பன கிலோ என்ன விலை என்று கேட்கின்ற நாட்டு மக்கள். ஆராய்ச்சி என்றால் அது பெண்களின் அந்தரங்கங்களை  தொட்டு விளையாடல் என நம்பிய மன்னர்கள், கண்டுபிடிப்பு என்றால் அது வானத்தை அடையும் பாதையை தேடுதல் என்கின்ற எண்ணம் கொண்ட மதகுருக்கள், இப்படி வகை தொகை இல்லா முட்டாள்களால் அந்த மத்திய கால ஐரோப்பிய பூமி திணறிக் கொண்டிருந்தது.

பூமி உருண்டை, அது தான் சூரியனை சுற்றி வருகிறது என்கிற அடிப்படை விஞ்ஞான கருத்துக்களை சொன்னவர்களுக்கு  ஏகப்பட்ட நன்கொடைகள், விருதுகள் : ஊர் விலக்கல், கசையடி, கழுவேற்றல்  என  வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மதப் புரோகிதர்கள் சொல்வது மட்டும் தான் மார்க்கம், விஞ்ஞானம் அறிவியல். அதைத்  தாண்டி வேறு கிடையாது. அவர்கள் மட்டும் தான் நம்பிக்கையானவர்கள்.  அவர்கள் சொல்வது மட்டும் தான் சத்தியம் என மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு உசுப்பேற்றப்பட்டுக் கொண்டிருந்தனர் . இது போதாது என்று பெண்களுக்கு ஆன்மா என்கிற ஒன்று இருக்கிறதா?? என்ற விவாதம் பூரண அரச ஆதரவுடன், திருச்சபையின் மேற்பார்வையில் பட்டி தொட்டி எங்கும் சீரியஸாக வேறு இந்தக் கால சீரியல்கள் போல முடிவில்லாமல்  நடந்து கொண்டிருந்தது. அப்பன்டிசைட்டிஸ், கற்ரக் போன்ற  நோய்கள் எல்லாம் கடவுளின் தண்டனை, இவைகளுக்கு ஒபரேஷன் ம்ம்ஹூ கூடவே கூடாது. வைத்தியம் என்பது பேய் விரட்டுவது தான் என இப்படி  ஏகப்பட்ட என்டர்டைன்மென்ட்களுக்கு  பஞ்சமில்லாத மௌட்டீகம் நிரம்பிய அந்தக் காலம் தான் அன்றைய ஐரோப்பாவின் புரபைல் பிக்ச்சர்.  இவைகள் தான் ஆண்டு முழுக்க அவர்களது பிரதான செய்திகளின் தலைப்புச் செய்தியும் கூட. 

அதே காலப்பகுதியில் உலகத்தின் இன்னும் ஒரு பகுதி அறிவொளியினால் பிரகாசித்து ஜொலித்து கொண்டிருந்தது.  கலை, இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், வானவியல், பொறியியல், தொழில் நுட்பம் என எவைகள் எல்லாம் பெயரிடப்பட  முடியுமோ அவைகள் எல்லாம் இங்கே கலைகளாக , கற்கைகளாக கொண்டாடப்பட்டன.  இவைகளை வளர்ப்பதும் அதற்காக அறிஞர்களை உருவாக்குவதும் தான் ஆட்சியாளரின் தலையாய கடமையாக இங்கே கருதப்பட்டது. பெண்களின் மேற்  படிப்பிற்காக வேண்டி மட்டுமே அவர்களுக்கான தனியான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பல்கலை அறிவும்  ஆராய்ச்சியும் தான் தங்களது மார்க்கத்தின் சிறப்பு என மார்க்க அறிஞர்களால் மக்கள்  ஆசையூட்டப்பட்டனர்.
எண்ணிலடங்கா புத்தகங்கள்  எழுதப்பட்டன. நித்தமும் மொழி பெயர்ப்புகள் நடந்தேறின. இதனால்  லைப்ரறிகள் புத்தகங்ளால் மட்டுமல்ல மக்களாலும்  நிரம்பி வழிந்தன. பாரசீக, இந்திய, சீன மற்றும் கிரேக்க அறிவுப் பாரம்பரியங்கள் எல்லாம் மொத்தமாக இங்கே ஒரே கூரையின் கீழ் கிடைத்தன. இதனால் வெளியிலிருந்து வருவோர், போவோர் எல்லாம் லைக்குகளையும், ஹார்டின்களையும் அள்ளி அள்ளி வழங்கி கொண்டிருந்தனர். 

ஒவ்வொரு பெரு நகரங்களிலும் மருத்துவ மனைகள் திறக்கப்பட்டன, வக்சீன்களுக்கான அடிப்படைகள் நோய் தடுப்பு முறைகளாக பின்பற்றபட்டன. அறுவை சிகிச்சை முறைகள் அதற்கான உபகரணங்கள், மருத்துவ பாட நூல்கள், கற்கைகள் என இன்றைய நவீன மருத்துவத்தின் கூறுகள் எல்லாமே இங்கே தான் அறிமுகப்படுத்தப்பட்டன. 
இவர்களிடம் இல்லாத கலைகளோ, கற்கைகளோ அண்ட சராசரங்களில் வேறெங்குமே இல்லை என உலகமே மூக்கில் விரல் வைத்து, வாயைப்பிளந்து, கைகளைக் கட்டி பார்த்துக் பார்த்ததுக் கொண்டிருந்தது. உண்மையிலே அது தான் உலகம் கண்ட ஒரு பொற் காலம். அது இன்றைய எந்த சபைகளோ அல்லது ஜமாத்துக்களோ இல்லாத அன்றைய அப்பாஸிகளதும், உஸ்மானியர்களும் ஆட்சிக் காலம். 

இன்று எல்லாமே தலைகீழாக மாறி விட்டிருக்கிறது. அமெரிக்கர்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறதா என தேடிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பியர்கள் எல்லாம் மனிதனை விட திறமையான ரோபோக்களை உருவாக்க முடியுமா என்ற  ஆராய்ச்சியில் மூழ்கி  இருக்கின்றனர். சீனர்களோ தாங்கள் விரும்பியவாறு தங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமா? அவர்களது மரபணுக்களை, ஜெனடிக்கை மாற்றி தமக்குத் தேவையான வகையிலான மனிதனை உருவாக்க முடியுமா என்ற சித்து விளையாட்டிலே இறங்கி இருக்கின்றனர். ஆனால் என்ன செய்ய!  நான்  என்ன செய்ய! விஞ்ஞானத்தின் உச்சியில் இருந்த ஒரு சமூகம் இன்று அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. அதுவுமில்லாமல் தங்களது படுகுழிகளை  தாங்களாகவே தோண்டிக் கொண்டிமிருக்கிறது. பாவம் ! வக்சீன்களுக்கான அடிப்படை தத்துவங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய சமூகம் , சத்திர சிகிச்சைகளை மேம்படுத்திய சமூகம் இன்று வக்சீன்களால் சைட் எபக்ட் வருமா, ஒபரேஷன் செய்யலாமா?, வீட்டிலே பிரசவம் பார்க்கலாமா? என்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறது.

என்ன தான் சொன்னாலும் முளையிலே கிள்ளி எறிய வேண்டிய இந்த குடுமிச் சண்டையை ,விஷமப் பிரச்சாரத்தை, முல்லாத்துவத்தை , புரோகித்தை  முறியடிப்பதற்காக வேண்டி நாம் ஒவ்வொருவரும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி  இருக்கிறது என்பது தான் கசப்பான  உண்மையாக  இருக்கிறது. 

Dr Arshath Ahamed MBBS MD PEAD 
Senior Registrar in Peadiatric 
Lady Ridgeway Hospital for Children 

14 கருத்துரைகள்:

Rightly said Dr Arsath .today, enemies of Islam are not outsiders but these inside clerics..
They live in stone ages.
They have been brained washed with middle age doctrines and legal ideas.
They have been trained to pick up add ideas of Islamic legal thought ..
Some clerics behave strangely and think strangely and live strangely.
They also do not belong to this 21st centurry .
These clerics must be punished by law of law for their misguidance..they misguidance public on heath and medical matter. This is life and death issue for some families and ladies and children ..
They argue that taking ladies for hospital for delivering babies is haram. For the fact:the doctors and nurses will see the private parts of these ladies ..in eastern provinces some clerics have beaten their wives for this reason...
These clerics did not learn Islamic law and it's legal theories.
In Islam there is something called استحسان٢...
Juristic preference or legal device of Istihsan..
This is an exceptional rule to general rule in Islamic law ..
General rule is that Awarath of ladies or men should be protected at all times and yet; there are exceptional situation like that of accidents; operations; medical treatments; delivering babies; and some other emergencies..
Islamic law is flexible to all situation unlike some fanatic clerics and Taliban style clerics think ..
Why not Muslim politicians speak about This?
Why not these clerics are put into jail?.these are dangerous clerics for national health in SL?.

I appreciate your effort Dr., but I really wonder why everyone who supports vaccines blindly ignore the fact that 'Vaccines' are misused by corporates, pharma companies and global ellites in recent times. What Bill Gates doing over Indian poor ppl using the Guinea Pig,

After anti vaccination, pelio diet and herbal remedies
Healthcare business getting fall so we should switch to alternative business instead of blaming others

After anti vaccination, pelio diet and herbal remedies
Healthcare business getting fall so we should switch to alternative business instead of blaming others

While all other Drs do not open their mouth on this issue ..
Only Dr Kamal Nasar; Dr Asrath and some a few speak about this issue.why not others?
Where is AJCU ?
Where are all Islamic groups?
Where all mosques on this issue?
Where all Muslim Mps?
Are you all wait until this issue become national calamity and to take blame on Muslim community in SL?
Do not you know Taliban bomb vaccination clinics?.do you you see these clerics copy them on this issue?
Why are you all silence on this?
This is not a problem of these few Drs but entire Muslim community will have to pay the price ..if you do take action against this stupid clerics now .

Taliban is one of most brutal & heartless terrorism group in the world. They are sole responsible for thousands of innocent murders of children and women in Afghanistan. Indeed they are the enemy of Islam and enemy of humans.
Their sidekicks must be chased down from Srilanka.

Taliban is one of most brutal & heartless terrorism group in the world. They are sole responsible for thousands of innocent murders of children and women in Afghanistan. Indeed they are the enemy of Islam and enemy of humans.
Their sidekicks must be chased down from Srilanka.

Doctors practicing western medicine dont have knowledge on vaccine production and what are the ingredients of the vaccines that can harm humans.Doctors only know about the basic concepts of vaccine and What WHO advice them.
Vaccination should not be mandatory and it is not mandatory rather it should be individuals choice.
In western community informed consent taken before any medical procedures.Here the doctors dont explain the benefits/harms of the vaccines to public.
If anything happens doctors and WHO escape. Only the public suffers.
still some vaccine products have haram ingredients.
Do anybody talk about to public? They only know how to blame the ulamas and public instead of making public awareness on the benifts and harm of the vaccine and its haram ingredients, not suitable for humans.

Anti vaccines propaganda is something happening all over the world. There are many anti vaccine movements in Europe and USA. They are established by Non muslim doctors. Don't link this topic with Islamic extremism. Last year there was a mass protest in Italy against mandatory vaccines. Only an immature person will link this matter with Islamic extremism. And there are many books written against vaccines. All of them are written by Non muslim doctors and medical research journalist.

Dr.Arshad! topic wont match with your arguement, rather says about making propaganda for some organization.

Abu sarah& Abdullah. Before you preach others check your arms if you both have had vaccination in your childhood.if you did not have them you had 90% sure you would have survived by now.you would have dead by now ..
Your Taliban form of Islam is no good at all for Sri Lanka..
You both must go to land of Taliban

Mr.Unknown! surviving not because of we vaccinated.All of you pre occupied with some ideas. Do research on this topic.How many died and disabled only because of vaccines.
you all already sold your brains and want to destroy the community.

Mr.Unknown
Don't sound like an idiot. Last year there was measles outbreak in UK,France, and Italy. Did Taliban go to those countries and brought down the vaccine rate ?. Even WHO blamed those countries for not maintaining the vaccine rate. What about other lleading anti vaccination mmovement in USA,Australia, Canada etc.. ? . Are they controlled by Taliban.

Post a Comment