Header Ads



மதூஷூடன் கைதானவர்கள், இலங்கைக்கு வரவுள்ளனர்

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோர் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையுடன் நாட்டை வந்தடைவார்கள் என சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன  தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள்  இம்மாதம்  27 ஆம் திகதி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

அத்துடன் பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுடன் தாம் எந்தவித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என அமல் பெரேரா தெரிவித்ததாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பியதும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கவுள்ளதாகவும் அமல் பெரேரா கூறியதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட தரப்பினர் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு உதவியளிப்பதற்காக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு, தீர்க்கப்படாத குற்றச் செயல்களை விசாரணை செய்யும் பிரிவு, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை உள்ளடக்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குறித்த அதிகாரிகள் குழுவில் ஐந்து அல்லது ஆறு பேர் அடங்கக் கூடும் என பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.