Header Ads



"கோத்தபாயவை ஜனாதிபதி நாற்காலியில், அமர்த்துவதே எதிர்பார்ப்பு"

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்துவதே தமது எதிர்பார்ப்பு என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து கூட்டணியை அமைத்த பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

புதிய கூட்டணியின் யாப்பை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் எமது தரப்பு நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்துவோம்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக மட்டுமல்ல ஜனாதிபதி பதவி நாற்காலியில் அமர்த்துவதே எமது தரப்பினரின் எதிர்பார்ப்பு எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பேடா நீ என்ன எதிர்பு தெரிவித்தாலும் அடுத்த ஜனாதிபதி எங்கள் கோதாபயாவே வாழ்க மஹிந்த ராஜபக்ச insha allah we will support you sir

    ReplyDelete

Powered by Blogger.