Header Ads



முஸ்லிம்களாகிய நமக்கு, இந்தவேலை நல்லதல்லவே...!

வார இறுதி நாளன்று கிழக்கு இலங்கை பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்ததாக பரப்பப்படும் பகிடிவதை தொடர்பான படத்தை பார்த்து வெட்கப்படுகின்றோம். முஸ்லிம்களாகிய நாம் எந்த உணர்வுமில்லாமல் நடந்து கொண்ட அந்த காட்சி வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்றாகும்.

மாற்றுமத சகோதரர்கள் கூட தம் இனத்தை சேர்ந்த சகோதரிகளுக்கு செய்யாத மிகவும் கேடு கெட்ட முறையில் பகிடிவதை என்ற பெயரில் வயலினிலும் சாக்கடையிலும் இருந்த தண்ணீரை எடுத்து அபாயா அணிந்திருந்த முஸ்லிம் மாணவியர் மீது முஸ்லிம்களுக்கு என்றே இருந்து வந்த பல்கலைக்கழகத்தில் வீசப்பட்டது கண்டிக்கத்தக்கதும் தண்டிக்கப்பட வேண்டியதுமான ஒரு விடயமுமாகும். 

பரீட்சையில் நிகழும் குற்றங்களுக்காக சில வருடங்களுக்கு அக்குற்றத்தை புரிந்தவர் சிலகாலம் பரீட்சை எழுதுவது தடுக்கப்படுவது போல பகிடிவதை புரிந்தவர்கள் தடுக்கப்படவேண்டும். இந்த தரம்கெட்ட பகிடிவதை எமது சமூகத்தின் மத்தியில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். 

அபாயா இன்று பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டு கொண்டு இருப்பது அவதானிக்கத் தக்க விஷயமாகும். மாணவியர் மீது தண்ணீர் வீசி மேற்கொள்ளப்பட்ட செயலை எவரும் அனுமதிக்கமாட்டார்கள் தண்ணீர் வீசும்போது ஓடிச்சென்ற மாணவியர் விழுந்து காயப்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பை யார் எடுக்கப் போகிறார்கள்? மற்றவர்களோடு சேர்ந்து குற்றமிழைத் பின் நான் இல்லை அவன் தான் என்று அடையாளம் காட்டப்பட்டு விட்டீர்கள். முஸ்லிம்களாகிய உங்களோடு பங்குகொண்டு பகிடிவதையில் ஈடுபட்ட ஏனையோர் ஒதுங்கி முஸ்லிம்களாகிய உங்கள் படமே வெளிவந்துள்ளது.

முஸ்லிம் என்ற நாமம் வைத்துக்கொண்டு இஸ்லாமிய பண்புகளை உதறித் தள்ளிவிட்டு தாங்கள் விரும்பியது போல் நடந்துகொள்வது இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு சாபக்கேடாகும். 

ஒழுக்க விழுமியங்களின் பெயர்போன சமுதாயமான நாம் வழிதவறி கொண்டு இருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே பகிடிவதை போன்ற செயல்களை தடுக்கும் விதத்தில் எல்லா சமூகமும் கவனம் செலுத்த வேண்டும் பொறுப்பான அமைச்சர் இவ்விடயத்தில் தவர மாட்டார் என நம்புகின்றோம்.

தல்துவை பவாஸ் 

3 comments:

  1. Thank you Fawaz for the article! Any students involved in ragging should be kicked out of the University. No point in giving them detention. It is pathetic to hear people justifying that the Bucketing culture is a re-unification process after ragging and it is a celebration. You can ask those abaya clad girls whether they enjoyed it and if your sister or daughter was put through this, would you call it a celebration! What a disgusting behavior.

    ReplyDelete
  2. If these girls go on street demonstrations and supposed the police use water canons on them, what would you do. Want they get wet in rain? Our community has other serious problems. Please look into that without wasting time diverting the real issues.

    ReplyDelete
  3. Excellent well said fawas

    ReplyDelete

Powered by Blogger.