Header Ads



முஸ்லிம் மீடியா போரம், துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து சிங்கள மாணவர்களுக்கு உதவி

இனங்களுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து மாவனெல்லை, ஹிங்குல மாணிக்காவ சிங்கள கணிஷ்ட வித்தியாலயத்தில் கல்விபயிலும் சுமார் 150 மாணவ, மாணவிகளுக்கு பாதணிகளை நேற்று கையளித்தது. மேற்படி கல்லூரி அதிபர் சேனாநாயக்க பண்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் பாதணிகளுக்கான பவுச்சர்களை வழங்குவதையும் பிரதேச ஆசிரிய ஆலோசகர் மென்டேரிகம சங்கரத்ன தேரர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன், வலயக் கல்விப் பணிப்பாளர் நிரோஸா பெர்னாண்டோ ஆகியோர் அருகில் நிர்பதையும் படத்தில் காணலாம்.

படங்கள் : அஷ்ரப் ஏ ஸமத்




1 comment:

  1. (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை;
    ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
    (அல்குர்ஆன் : 4:114)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.