Header Ads



குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றால், அதனை எங்கு போடுவது..? ஜனாதிபதி

நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

அந்தக் குப்பைகளை கடலில் போடவும் முடியாது. அவ்வாறு போட்டால் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

குப்பைகளைப் போடுவதற்கு எதிராக கிராமங்களில் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் அன்பான விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். நாம்  உடம்புக்குள் உட்கொள்ளும் உணவு தவிர்ந்த ஏனைய அத்தனையும் குப்பைகளாகவே சேர்கின்றன.

தற்பொழுது குப்பை முகாமை செய்வதற்குள்ள நவீன முறைமையை பொருத்தமான ஒர் இடத்தில் அமைப்பதன் மூலமே இந்தக் குப்பை பிரச்சினைக்கு தீர்வை வழங்கலாம். இவ்வாறு செய்வதனால் அயலவர்களுக்கும், கிராமத்தில் வாழும் மக்களுக்கும் எந்தவொரு பிரச்சினையும் எழுவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலன்னறுவ திம்புலாகல மகா வித்தியாலயத்தில் 2 கோடியே 10 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

2 comments:

  1. ok then you have to establish waste recycling station in colombo. why you want to establish it in puttalam?

    ReplyDelete
  2. நல்ல கேள்வி குப்பையை கொட்டுவதால் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினையில்லை என்றால் கொழும்பு குப்பைகளை அங்கயே ஒரு இடத்தை தேர்வு செய்து எடுத்து அந்த குப்பைகளை கொட்டவும் புத்தளமக்கள் அவர்களின் குப்பைகளை அங்கு கொட்டிக்கொள்ளட்டும் அவ்வாறே அவர்அவர்களின் மாவட்டங்களில் இத்திட்டத்தை உருவாக்குங்கள்
    *மேலும் கொழும்பில் புதிய நகரம் கட்ட சீனாவிலிருந்து கப்பல் கொண்டுவந்து கடலில் மண் நிரப்பி ஒரு பகுதியை உருவாக்கிவைத்துள்ளீர்கள் அதுபோன்றே மீண்டும் ஒருமுறை கொழும்பு குப்பைகளை கொட்டுவத்ற்காக கொழும்பு பகுதி கடலில் மண் நிரப்பி ஒரு இடத்தை உருவாக்கவும் இதுதான் சரியான தீர்வும் நியாயமும் ஆகும்

    ReplyDelete

Powered by Blogger.