Header Ads



முஸ்­லிம்­கள் போன்று சிங்களவரும் போதைப்பொருளினால், இலா­ப­மீட்­டுவது தவறா என மஹிந்த கேட்டுள்ளார் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் தெரிவிப்பு

முஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும்  சமூ­க­வ­லைத்­தளம் ஒன்று எனது பேச்சை திரி­பு­ப­டுத்தி செய்தி வெளி­யிட்­டுள்­ள­தென ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் கோப்­குழு அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தனியார் ஊட­க­மொன்றில் கலந்­து­கொண்டு அண்­மையில் போதைப்­பொருள் ஒழிப்பு சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டினேன். இதன்­போது மஹிந்த ராஜபக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருக்­கும்­போது, நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் நிமல் லான்­சாவின் வீட்டை திடீ­ரென சுற்­றி­வ­ளைத்த அதி­ர­டிப்­ப­டை­யினர், அங்கு போதைப்­பொருள் கடத்­த­லுடன் தொடர்­பு­டைய ஒருரை கைது­செய்­துள்­ளனர்.

இது­தொ­டர்­பாக எஸ்.பி. திஸா­நா­யக்க மஹிந்த ராஜபக்ஷவிடம் போதைப்­பொருள் கடத்­தலை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனத் தெரி­வித்­துள்ளார். இதற்கு மஹிந்த ராஜபக் ஷ எஸ்.பி. திஸா­நா­யக்­க­விடம், “அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டவர் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரு­பவர் அல்ல. அவர் விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்கை மாத்­தி­ரம்தான் மேற்­கொள்­கிறார். முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் போரா இனத்­த­வர்­களும் போதைப்­பொருள் கொண்­டு­வந்து சம்­பா­திக்­கும்­போது சிங்­கள மக்கள் அதனை கொண்­டு­வந்து இலா­ப­மீட்­டினால் அதி­லி­ருக்கும் தவறு என்ன?” என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்­ட­தாக எஸ்.பி. திஸா­நா­யக்க எனக்குத் தெரி­வித்தார். அத­னைத்தான் நான் குறித்த தனியார் ஊடக கலந்­து­ரை­யா­டலில் தெரி­வித்தேன்.

ஆனால் எனது பேச்சை திரி­பு­ப­டுத்தி ‘கம்­பஹா சிங்­கயோ’ என்ற சமூ­க­வ­லைத்­தளம், முஸ்­லிம்­கள்தான் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­வித்­தாக செய்தி வெளி­யிட்­டுள்­ளது.  நான் ஒரு­போதும் இன­வா­த­மாக எந்தக் கருத்­தையும் தெரி­வித்­த­தில்லை. கம்பஹாவில் முஸ்லிம்களுடன் முரண்பட்டுக்கொள்ள வைக்கும் முயற்சியாகவே இது இருக்கலாம். அதனால் செய்திகளை திரிபுபடுத்தும் மோசமான நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றார்.

2 comments:

  1. STF catches an alleged drug dealer. President says if muslims can smuggle drugs why cant our guys sell it and make a living ? SB witnessed presidents conversation and pass the same to the current member of parliament. this story can topple a government in a day in some countries. not definitely in sri lanka. this is just a news for racists to attack muslims. they see nothing wrong about drugs or who is supporting drug dealers here. wonder of asia.

    ReplyDelete
  2. இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக போதை பொருள் தமிழர்களாளேயே கடத்தப்படுகிறது

    ReplyDelete

Powered by Blogger.