February 19, 2019

முஸ்லிம்­களை மீள்குடி­யேற்­று­வது எனது கட­மை­, தமிழ் எம்.பி.க்களுக்கு றிசாத் பதிலடி

‘நான் முஸ்லிம் இனத்­துக்­கான அமைச்­ச­ரல்ல. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன­வாதம் பேசி தமிழ், முஸ்லிம் உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது. மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் ஒரு பகு­தியே எனக்குத் தரப்­பட்­டுள்­ளது. நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றும் பொறுப்பே என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அத­னாலே நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு முத­லிடம் அளிக்­கிறேன்’ என கைத்­தொழில், வர்த்­தகம், கூட்­டு­றவு அபி­வி­ருத்தி மற்றும் நீண்ட கால­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

முல்­லைத்­தீவு மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழுக் கூட்­டத்­தின்­போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் மற்றும் எஸ். ஸ்ரீஸ்­கந்­த­ராசா ஆகியோர் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் மீது சுமத்­திய குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்; மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்சு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமே இருக்­கி­றது. அதனால் தமிழ் மக்­களின் புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் அவர்கள் பிர­த­ம­ரி­டமே கோரிக்கை விடுக்­க­வேண்டும். என்­னிடம் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்சு வழங்­கப்­ப­டக்­கூ­டாது என பிர­த­ம­ரிடம் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்­கவே அவ்­வ­மைச்சு என்­னிடம் வழங்­கப்­ப­டாது பிர­த­மரின் கீழ் இருக்­கி­றது.

புனர்­வாழ்வு மற்றும் மீள் குடி­யேற்ற அமைச்சு முழு­மை­யாக எனக்கு வழங்­கப்­பட்டால் தமிழ் மக்­களின் புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான செயற்­திட்­டங்­களை என்னால் முன்­னெ­டுக்க முடியும். இதை விடுத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்னை இன­வா­தி­யாக சித்­தி­ரிப்­பது தவ­றாகும். இதனால் தமிழ், முஸ்லிம் உற­வு­க­ளுக்­கி­டையே விரி­சல்கள் ஏற்­ப­டலாம்.

2009 இல் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்பு முல்­லைத்­தீ­வி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த 1800 குடும்­பங்­க­ளுக்­கென 900 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டது. என்­றாலும் அக்­கா­ணியில் அவர்கள் மீள் குடி­யே­று­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இது­வரை காலம் அது இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது. அதனால் மீள் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருந்த அநேக குடும்­பங்கள் திரும்­பிச்­சென்று விட்­டன. அங்கு எஞ்­சி­யி­ருக்கும் 700 குடும்­பங்­களில் 500 குடும்­பங்­க­ளுக்­கா­வது அர­சாங்கம் தலா 20 பேர்ச்சஸ் வீத­மா­வது பெற்றுக் கொடுக்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்ளேன்.

நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்லிம் மக்­களை மீள் குடி­யேற்­று­வது எனது கட­மை­யாகும். இந்த அதி­காரம் அமைச்சு மூலம் எனக்குத் தரப்­பட்­டுள்­ளது என்­பதை என்­மீது குற்றம் சுமத்­து­ப­வர்கள் புரிந்துக் கொள்­ள­வேண்டும். இதை­வி­டுத்து என்­மீது இன­வாத சேறு பூச முனை­வது அறி­யாத்­த­ன­மாகும்.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் மீள் குடி­யேற்றம் புனர்­வாழ்வு அமைச்­ச­ராக பதவி வகித்த காலத்தில் தமிழ் மக்­க­ளையே மீள் குடி­யேற்­றி­யுள்ளேன் என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது. நாட்டின் அபி­வி­ருத்­திக்கும், நிலை­யான ஆட்­சிக்கும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம், தேசிய ஒரு­மைப்­பாடு இருக்­க­வேண்டும். இல்­லையேல் அந்த இலக்­கினை எம்மால் எட்ட முடி­யாது என்றார்.

5 கருத்துரைகள்:

தமிழர்களுக்கு எதிராகவும் மகிந்தவுக்கு ஆதரவாகவும் ஊர்வலம் போனவர்களே!
மகிந்த விடம் கேட்டால் அம்பாந்தோட்டையில் காணிகள் தருவாராம், அங்கு போய் கட்டிப்பாருங்கள்.

நீங்கள் நீண்டகால மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கலாம். ஆனால் வடக்கில் நடைபெறும் எந்த அபிவிருத்தியோ அல்லது குடியேற்றங்களோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுமதி இன்றி நடை பெறாது. இதுதான் ரணிலுக்கு கூட்டமைப்புக்குமான டீல். யாழ்பாணத்திலே முஸ்லிம்களின் குடியேற்றத்துக்கு அடுக்கு மாடிகள் கட்டி குடியேறுவதட்கு கூட்டமைப்பு இணங்கியுள்ளது. அனால் வன்னியில் அதட்கு யாருமே இணங்க மாட்டார்கள். வன்னி நிலப்பரப்பில் சனத்தொகை குறைவு மற்றும் இன பரம்பலை மாற்ற எத்தனிக்கும் றிசாட்டுக்கு அனுமதி எப்பவுமே கிடையாது. முடிந்தால் உங்கள அமைச்சை வைத்து முயட்சித்து பாருங்கள். ஏதாவது சாத்தியப்படுகின்றதா என.

உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அமைச்சு முஸ்லிம்களுக்கான மீள் குடியேற்ற அமைச்சு. கிருஸ்துவ பயங்கரவாதி சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றவனையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் உங்கட பணியை மேற்கொள்ளுங்கள். அவர்களுக்கு தேவையென்றால் ரணிலிடம் கேட்டுக்கொள்ளட்டும். இந்த பயங்கரவாதிகளுக்கு தலைசாய்க்க சென்றால் நீங்கள் கடைசிவரை ஒன்றும் செய்ய முடியாது

@Gtx w, என்ன வென்றாலும் கட்டலாம், ஆனால், யாழ் இனவிகிதாரப்படி தான் வீடுகள் பகிரப்படும்.
றிசாத் தனது சொந்த காசில் கட்டினாலும் பரவாயில்லை, எமது வரிப்பணத்தில் தான் கட்ட முயற்சிக்கிறார்

Ajan இந்த நாட்டில் பயங்கரவாதம் செய்து நாட்டை சீரழித்த கூட்டம் நீங்கள். நீங்கள் செய்த கொடுமைகளுக்கு இன்னும் 100 வருடங்களுக்கு வரிப்பணம் கட்டினாலும் உங்களுக்கு இந்தநாட்டில் ஒரு நிமிடம் வாழ்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள அரச வளங்களை பயன்படுத்தக்கூட தகுதியில்லை

Post a comment