Header Ads



கிழக்கு மாகாண அதிகாரிகளை, யுத்த முனையில் பணியாற்ற வைத்துள்ள ஹிஸ்புல்லாஹ்

யுத்த முனையில் படையினர் உஷார் நிலையில் இருப்பது போன்று, மக்கள் பணிக்காக கிழக்கு மாகாண உயர் அதிகாரிகளை உஷார் நிலையில் வைத்து ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மக்களுக்கு பணியாற்றி வருவதையிட்டு பெருமையடைகின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் வினைத்திறன் மிக்க, வேகமாக செயற்படக்கூடிய, அரசியல், பிரதேச வேறுபாடின்றி, இன நல்லுறவோடு சேவையாற்றக் கூடிய ஆளுநரை ஒருவரைப் பெற்றுள்ளது. இச்சந்தர்ப்பத்தினை கிழக்கு மாகாண மூவின மக்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் கிராமமட்ட அபிவிருத்திற்காக ஜனாதிபதி கிராம சக்தி திட்டம் ஊடாகவும் பிரதமர் கம்பரெலிய திட்டம் ஊடாகவும் அபிவிருத்திகளுக்கு நிதிகளை ஒதுக்கீடு அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகின்றது. அதனடிப்படையில்  இவ்வாண்டுக்கு ஆளுநர் நாநூறு மில்லியன் ரூபாவினை கிராம அபிவிருத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதேசமட்ட கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (23) சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(றியாத் ஏ. மஜீத்)

No comments

Powered by Blogger.