Header Ads



அன்புள்ள,, சாபி ரஹீமின் கவனத்திற்கு...!

ஏமாற்றப்பட்ட கஹடோவிட்ட மக்களின் சார்பாக, தங்களின் மேலான கவனததிற்க்கும் சிந்திப்பதற்கும் முன்வைப்பதாவது...

SLMC மூலம், தாங்கள் ஆற்றிய பாரிய சேவையை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாதவை. நீங்கள் செய்த அனைத்து பணிகளுக்கும் நாம் என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வானாகவும்.

மர்ஹும் அனீஸ் அவர்களுக்குப் பின்  தொடர்ந்தும் 
மூன்றாம் தடவையாக தாங்கள் மேற்கொண்ட அரசியல் காய்நகர்த்தலில் நேர்மையற்ற அரசியல் போக்கை கையாண்டதில் தங்களின் இமேஜ் இன்று பாதிக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள்,அன்று இருந்த வீராப்பு பேச்சுப் பேசியவர்களால் தங்களுக்கு இன்று நாலா திசைகளிளும் எல்லா மூலை முடுக்கிலும் பேசப்படுகின்ற எதிர்வீச்சினை மூடி மறைக்க எவராலும் முடியாது.

மேலும் அன்று வேட்பாளராக களமிரங்கியவர்களில்
உயர்பீட உறுப்பினர் , போராளிகள் இன்னும் சில ஆதரவாளர்கள் Candidates ஆக இறங்கினார்கள்.

ஆனால்,இளம் துடிப்புள்ள கம்பஹா மாவட்டத்தில் வட்டக்கா குடும்பத்தில் புது முகம் ஒன்று முதன் முதலில் போட்டியிட்டு 4363 தெரிவு வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த சகோதரர் முஸ்தாக் மதனியின் வெற்றியை, ஜீரனிக்க முடியாத ஒரு சில நுணிப்புல் மேய்கின்ற கருப்பாடுகளின் பேச்சைக் கேட்டு. தாங்கள் எடுத்த தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது அதற்கு  தடையாக இருந்தவர்களால் இன்று தங்களுக்கு எமது கிராமத்துக்குல் வந்து மனம்விட்டுப் பேச முடியாது என்பதை ,தங்களின் மனச்சாட்சியே கூறும் என்பது  தான் மறைந்துள்ள  உண்மையாகும் என்பதே தாங்கள் காட்டும் அமைதி எமக்கு தெளிவுபடுத்துகின்றது, புலனாக்குகின்றது..

நான் ஒரு அரசியல் வாதி அல்லர்.
ஆனால்,பெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்றைய தேசிய தலைவருடன் கடந்த 1990ல் முதல் நல்லுறவையும் கௌரவத்தையும் மதிப்பையும் பேணி வந்தேன்...

எமது கிராமத்தின் 25 ஆண்டுகளுக்கு மேலாக  சுகாதரமற்ற நிலையில் கானப்படுகின்ற குடி நீர் தேவையை, இந்த நல்லாட்சிக்கான அரசாக்கத்தின் 100 நாள் திட்டத்தின் கீழ் அன்று தலைவரிடம் கடிதம் மூலம் விண்னப்பித்தேன்... ஏமாற்றப்பட்டோம்..

எமது கிராமத்துக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கின்ற குடி நீரை பெற்றுத்தர முடியாத அமைச்சருடன் நாம் (நான்)அரசியல் ரீதியான ஆதரவை ஏன் வைத்துக் கொள்ளவேண்டும்..!? என்று என் மனதுக்குள் என்னை சிந்திக்க வைத்தது...
முஸ்தாக் மதனிக்கு தாங்கள் கொடுத்த உத்தரவாதத்தை ஏற்று, தேசிய தலைவரும் அங்கீகரித்து , ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எமது கஹட்டோவிட கிராமத்தில் நடந்த பொழுது அனைவர் முன்னிலையிலும் " கஹட்டோவிட்ட மக்களுக்கு இரண்டு முக்கியமான மகிழ்ச்சியான விடயங்கள்.. ஒன்று அடுத்து வரும் ஆண்டில் தம்பி முஸ்தாக் மதனிக்கு இரண்டு வருட பிரதிநிதித்துவமும் குலாய் நிர் வினியோகமும் பெற்றுத்தருவோம்" எனக் கூறினார் என்பதையும் நம்பி நாம்  ஏமாற்றப் பட்டோம்..
எம் கிராமத்தை மதிக்காத ஏமாற்றிய அரசியல் தலைமைகள், உறவு எனக்கு தேவையா....!? என்பதில் தீர்மானிக்க நாழு ஆண்டுகள் பொறுமையாக இருந்தேன்.இதன் பின் இழவுகாத்த கிளியாக அமைந்து விடக்கூடாது என்பதை அரசியல் தூரனோக்குடன் எனது கிராமத்துக்காக  இனி என் பணி வேறு.. என மாற்றிக் கொண்டேன்..
எனக்கும் தாங்களுக்கும், தலைவருக்கும் தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை.
எம்மை ஏமாற்றிய அரசியல் தலைவர்களுக்கு நாம் கற்றுக் கொண்ட அரசியல் மூலமே உரிய பாடத்தை புகுட்டவேண்டும்.... என்பதே எமது கிராமத்தவர்களின் நோக்கமாகும்..

இந்த விடயத்தில் எமது நேர்மையான உணர்வுகளை மதிக்கின்ற SLMC ஆதரவாளர்கள் உண்மையான போராளிகள் மற்றும் இன்றைய இளம் வாளிப  நல்ளுல்லங்கள் 
புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லென்னத்துடனே இந்தக் கடிதத்தை எழுதினேன்.
எமது கிராமத்தில் இரண்டு தடவை வாப்பாவும் மகனும் SLMC பிரதேச சபை உறுப்பினராக அழகு படுத்திய கிராமம் என்பது இங்கு குறிப்பிடத்தக் விடயமாகும்.
எந்தக்கிராமத்திலும் யாரும் அரசியல் பிரதிநிதிகளை ஜனனாயக முறையில் வென்றெடுக்கவே முயற்சிக்கின்றனர்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியின் நிமித்தம் 4000க்கு மேல் தெரிவுவாக்குகள் பெற்ற முஸ்தாக் மதனிக்கு ஏன் கொடுக்கவில்லை...???

எமது கிராமத்துக்கு நீங்கள் செய்த பணிகளை என்றும் மறக்காத நன்றியுடன்..

இவன்,

WAFA SADAKATHULLA

1 comment:

  1. Why Jaffna Muslim providing platform for internal problems of political parties?

    ReplyDelete

Powered by Blogger.