Header Ads



பன்றிக் கொழுப்பு, பால்மாவில் உள்ளதா..? இல்லையா..?? பாராளுமன்றத்தில் சூடான வாக்குவாதம்

இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா தொடர்பில் பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யான தகவலாகும் என சுகாரதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் உண்மை சொல்கிறாரா பிரதி அமைச்சர் உண்மை சொல்கிறாரா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொண்டனர். 

தன்போது சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதுதொடர்பில் வாக்குவாத்திலும் ஈடுபட்டனர்.

பாராளுமன்றம் இன்று  சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்புக்களை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் மால் மாக்களில் பன்டிக்கொழும்பு கலந்திருப்பதாக பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண இந்த சபையில் அறிவித்திருந்தார். அதொடர்பாக பரிசீலனை செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை பரிசீலனை செய்யுமாறு தெரிவித்திருக்கின்றபோதும் அந்த நிறுவனங்கள் முறையாக  பரிசீலனை செய்வதில்லை. அதனால் இது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுகின்றது.

அதனால் எவ்வாறான பால் மாக்களில் பன்டி கொழும்பு கலந்திருப்பது குறித்து இந்த நாட்டில் இருக்கும் முஸ்லிம் மக்களும் பன்டி இறைச்சியை ஆகாரத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் சிங்கள, தமிழ் மக்களும் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இதுதொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் பணம் வழங்கியும் அந்த நிறுவனங்கள் அதனை செய்வதில்லை என்றால் பாரிய பிரச்சினையாகும்.

அதனால் இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை பயன்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில்  நாட்டில் இருக்கும் 20 வீதமான மக்கள் பாரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த விடயத்தின் பாரதூரத்தை கருத்திற்கொண்டு இதுதொடர்பாக தேடிப்பார்க்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிவுறுத்துகின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.