Header Ads



தூபிகளில் ஏறும் இனவாதத்தை நிறுத்த, பள்ளிவாசல் மூலம் முஸ்லிம்களை அறிவுறுத்த வேண்டும்

பௌத்தர்களுக்கு புனிதமான தூபிகளில் ஏறுவது குறித்த இனவாத செயற்பாடுகளில் ஈடுபடாமல்  இருக்க மௌலவிமார்கள் பள்ளிவாயல்கள் ஊடாக முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்த வேண்டும் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் வலவாஹென்குன்வெவ தம்மரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று -14- முதூர் மாணவர்கள் இருவர் மிகிந்தலை ரஜமஹா விகாரை புராதன தூபி மீது ஏறி படம் எடுத்த போது கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் , 

திட்டமிட்ட ஒரு குழுவால் மேற்கொள்ளப்படும் ஒரு  செயலாகவே நான் இதனை காண்கிறேன். இன்று வடக்கில் கிழக்கில் புத்தர் சிலை ஒன்றை நிறுவ முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற இனவாத செயற்பாடுகளில் ஈடுபடாமல்  இருக்க மௌலவிமார்கள் பள்ளிவாயல்கள் ஊடாக முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்த வேண்டும் என நான் கோரிக்கை முன்வைக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. மதவாதமும் சாப்பாட்டு வாதமும் உள்ள சமூகமாக மாறிவிட்டார்கள்

    ReplyDelete
  2. அவரவரது சமயம் மொழி அவரவர்களுக்கு மிகப் பெரியதுதான் மொழியை விட்டுக் கொடுத்தாலும் மதத்தை யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதற்கு நம்முன்னேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. இன்னொரு மதம் சார்ந்த புனித இடங்களில் வேற்று மதத்தானுக்கு என்ன வேலை இருக்கின்றது. மதலாலயங்களுக்குள் உட்செல்லும்போது பாதரட்சைகளை களைந்து செல்வது அவ்வவ் மதம் சார்ந்த ஒழுக்கம். அது மதத்திற்கும் கலாசாரத்திற்கும்; கொடுக்க வேண்டிய மரியாதையும் சிறப்புமாகும். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் பஞ்ஞாப்பில் பிறக்காமல் விட்டதே பெரும் பாக்கியம். தேரர் அவர்கள் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.