Header Ads



சட்டவிரோத மது பயன்பாட்டை, எனது ஆட்சிக் காலத்தில் இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி சூளுரை

குறித்த ஓர் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கிராமிய மக்களின் ஏழ்மை நிலைமை அதிகரிப்பதற்கு ஏதுவாகியுள்ள சட்டவிரோத மதுபான பயன்பாட்டை முற்று முழுதாக இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படும்.

தங்களது பிரிவில் சட்டவரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் அத்தியட்சகருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பிலான சுற்று நிருபமொன்று எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும்.

நல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல சமூகமொன்றை கட்டியெழுப்புதல் மற்றும் இளம் சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்தல் மற்றும் சட்டவிரோத மதுபான பயன்பாட்டையும் எனது ஆட்சிக் காலத்தில் இல்லாதொழிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

2 comments:

  1. ஆரம்பத்தில் சட்ட விரோத மதுவுக்குத் தடை,
    அப்புறம் சட்டபூர்வ  முழுமையான மதுத் தடை,
    அப்போதே போதை ஒழிப்புக்கு அர்த்தம் இருக்கும்.

    அதற்கிடையில், 'முன்மாதிரியான சமூகத்தினர்'  ஆங்காங்கே செய்து காட்டி இருக்கும் புகைத்தல் இல்லாத கிராமங்களை, முதலில் முஸ்லிம்களும்
    ஈற்றில் தேசமெங்கும் செய்து காட்டினாலே போதும்,
    உலக மாந்தர் வியந்து சுகம் பெற அது வழிகோலும்.

    ReplyDelete
  2. சட்டவிரோத மதுபானம் பற்றித்தான் பேச்சும் ஆரவாரமும். தங்கள் மகள் அண்மையில் மதுபான லைஸென்ஸ் எடுத்து திறந்துள்ள பெரிய மதுபான சாலை மாதிரி எத்தனையும் திறக்கலாம், குடிக்கலாம் போதையில் மயங்கிக் கிடக்கலாம். பிரச்சினை எல்லாம் சட்டவிரோத மதுபானப் பாவனை மட்டும்தான்.மாலையில் கடும்உழைப்பின் பின் வீடு செல்லும் ஊழியர்கள் எடுக்கும் அந்த கடுகம்பி பானத்துக்கு மட்டும்தான் இந்த சட்டமும் ஆரவாரமும். இனி ஒன்லைனில் மதுபான லைஸென்ஸ் எடுத்து ஊர்,நகரம் முழுக்க சட்டரீதியான மதுபானக் கடைகள் திறக்கத்தயார். துரித பொருளாதார முன்னேற்றத்தின் மற்றொரு கட்டம்!

    ReplyDelete

Powered by Blogger.