Header Ads



தாலிபான்களை சந்திக்கவுள்ள, மொஹமட் பின் சல்மான்

பாகிஸ்தானுக்கு முதல் முறையாக விஜயம் செய்யவுள்ள சவுதிஅரேபிய இளவரசர் மொஹமட்பின் சல்மான் தாலிபான்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் இந்த விஜயம் இன்று இடம்பெறவிருந்தது.

எனினும் அவரது இந்த விஜயம் ஒரு நாள் தாமதமாகியுள்ளதாகவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை பாகிஸ்தான் செல்லும் அவர் நாளை மறுதினம் வரை அங்கு தங்கி பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே அவர் பாகிஸ்தானில் உள்ள தாலிபான் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சவுதி இளவரசர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 19ம் திகதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. தாலிபானின் அழிவின் ஆரம்பம். இஸ்ரவேல் சரியாக புச்சர் காக்காவுக்கு திட்டத்தைக் கையளித்திருக்கின்றது. இனி தாலிபானை அழித்து ஒழிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்தியாவுக்கு செல்லும் புச்சர் காக்கா அங்கு சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை அழிக்க சரியான திட்டத்தை வழங்கி அதற்கான பணத்தையும் மோடிக்கு வாரி வழங்குவான்.

    ReplyDelete
  2. Better talk to Israel first

    ReplyDelete

Powered by Blogger.