February 04, 2019

பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில், ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை - துருக்கி ஜனாதிபதி


கடந்த சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­ற­மான நெஸ்­ஸெட்டின் முஸ்லிம் உறுப்­பி­னர்­களை துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் இஸ்­தான்­பூலில் வர­வேற்றார்.

துருக்­கிய ஜனா­தி­ப­திக்கும் இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யே­யான கலந்து­ரை­யாடல் தரப்யா ஜனா­தி­பதி வளா­கத்தில் (ஹூபர் வில்லா) மூடிய கத­வு­க­ளுக்குப் பின்னால் சுமார் 90 நிமி­டங்கள் வரை நடை­பெற்­றது என ஜனா­தி­ப­தியின் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இக் கலந்­து­ரை­யா­டலின் போது பலஸ்­தீன மற்றும் அதன் மக்கள் தொடர்­பான ஆத­ரவு நிலைப்­பாட்­டி­லி­ருந்து ஒரு­போதும் பின்­வாங்­கப்­போ­வ­தில்லை எனத் தெரி­வித்த அர்­துகான், ஆக்­கி­ர­மிப்பை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கும், சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­த­வ­தற்கும் முடி­யு­மான அனைத்­தையும் துருக்கி மேற்­கொள்ளும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

காஸாவில் டெல் அவிவின் அடக்­கு­மு­றைகள் அதே­போன்று யூத தேசத்தின் சட்­டத்­திற்கு எதி­ரா­கவும், துருக்­கிக்கு எதி­ரான அடிப்­ப­டை­யற்ற கட்­டுக்­க­தை­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்­ரே­லிய சட்­ட­மன்­றத்தில் பலஸ்­தீ­னர்­களின் மன­வு­ணர்­வினைப் பிர­தி­ப­லிக்கும் சேவை­யினை வழங்கி வரு­கின்­ற­மைக்­காக நெஸ்ஸெட் உறுப்­பி­னர்­க­ளுக்கு நன்­றி­க­ளையும் தெரி­வித்தார்.

இஸ்­ரேலை யூத நாடாக வரை­யறை செய்யும் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் பலஸ்­தீன குடி­மக்­களின் உரி­மை­களை மலி­னப்­ப­டுத்தும் செயற்­பா­டாகும் எனத் தெரி­வித்த அவர், அக்­கு­ழு­வினர் ஒற்­று­மை­யு­டனும், இணக்­கப்­பாட்­டு­டனும் பணி­யாற்ற வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்டார்.

அர­ச­க­ரும மொழி­யாக இருந்த அரபு மொழியை நீக்­கி­விட்டு ஹீப்ரு மொழியை மாத்­திரம் அர­ச­க­ரும மொழி­யாக இஸ்ரேல் சட்­ட­மன்றம் அங்­கீ­க­ரித்­துள்ள அதே­வேளை, இணைந்த ஜெரூ­ச­லத்தை அதன் தலை­ந­க­ராகக் கொண்டு அரபு மொழிக்கு விசேட அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்தச் சட்டம் ஏலவே இஸ்­ரே­லிய யூதர்­க­ளாலும், அர­சாங்­கத்­தி­னாலும் பாகு­பாடு காட்­டப்­பட்டு வரும் அரே­பிய மக்கள் தாம் இரண்டாம் தரப் பிர­ஜை­க­ளாக கரு­தப்­ப­டு­வ­தாக அம் மக்கள் உணரும் நிலையில் மேலும் தனி­மைப்­ப­டுத்தும் ஆபத்தைக் கொண்­டுள்­ளது.

இஸ்­ரே­லியக் குடியுரிமையினைக் கொண்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் 21 வீதமாகக் காணப்படுவதோடு, இஸ்ரேலிய அரபுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் இஸ்ரேலிய பாராளுமன்றமான நெஸ்ஸெட்டில் உறுப்பினர்களையும் கொண்டுள்ளனர்.

3 கருத்துரைகள்:

இந்த statements க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

கூட்டாக பல போர்கள் நடாத்தியும் இத்துண்டு குட்டி இஸ்ரேலிடம் படு தோல்வி. மத்திய கிழக்கில் ஒரு சில நாடுகள் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாடுகள். இவற்றில் எண்ணை உட்பட வேறு எந்த வளங்களும் இல்லாமல் மனித உழைப்பால் வளர்ச்சியடைந்த நாடு இஸ்ரேல் மட்டுமே.

உண்மைதான்

Ajan antoney raj ulahamudiwukana adayalangalil ondru iedhu. indha adayalam atkanaway naangal arindhawarhal andru Antichrist waruano indha kootam awanudan serndhu aliwan. Illuminati adayalam illamal olindhidum.

Post a Comment