February 10, 2019

ரோஹித்த தசநாயக்காவுக்கு முஸ்லிம்கள், என்ன செய்யப் போகிறார்கள்..?

நண்பர் Rohitha Dasanayaka  பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கலாநிதி. அத்தோடு சிறந்த மனிதப் பண்பாட்டை உடையவர், தனது கல்வித்துறைசார் ஆய்வுகளுடன் ,புதிய பல ஆய்வுகளையும் சமூக நன் நோக்கம் கருதி மேற்கொள்பவர், அத்தோடு அவரது ஆய்வுகள் நடைமுறையுடன் இணைந்ததாகவும், இலங்கைச் சமூகங்களிடையே, ஒற்றுமையையும், புத்துணர்வையும் உண்டு பண்ணுவதாகவும் அமைந்திருப்பது அதன் சிறப்பு,,

அந்தவகையில் இலங்கைக்கும்_ அறபுக்களுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு பற்றிய தனது ஆய்வை ,நூல் வடிவமாக்கி, அதனைச் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார், கொடகே #ගොඩකෙ பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், இலங்கைக்கும் அறபுக்களுக்கும் இடையேயான பல்வேறு முக்கியமான தொடர்புகளையும், பல  சுவாரசிய நிகழ்வுகளையும் குறித்து காட்டுகின்றது, இதனை தமிழ்மொழியில் ,மொழிபெயர்ப்பதும், அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியதும், முஸ்லிம்களின் சமூகக் கடமை, இது அவசரமாக மேற்கொள்ளப்படவும் வேண்டும், 

  இந் நூலில்,வரலாற்று, மற்றும் தொல்லியல் ஆதாரங்களுடன் தனது கருத்துக்களை உறுதிப்படுத்தி இருக்கும் கலாநிதி றோஹித, இவ் ஆய்வை, மேற்கொள்ளும்போதும்,அதனை நூலாக வெளியிட முனையும் வேளையிலும் பல்வேறு சிரமங்களை அனுபவித்ததை அடிக்கடி என்னோடு பகிர்ந்துகொள்வார், அந்த வகையில் அவரது தொடர் முயற்சி பாராட்டுக்குரியது, 

இன முறிவும், அடிப்படைவாத சிந்தனையிலான  இயக்கவாதங்களும், எல்லாச் சமூகங்களிலும், மலிந்து கிடக்கும் இக்காலத்தில்,#தான்_ பிறந்த_சமூகத்தையும்_ தாண்டி_இன்னுமொரு_சமூகத்தின் #இருப்பிற்கான_வேர்களைத் தேடி அவர் மேற்கொண்ட முயற்சியை, முஸ்லிம் சமூகம் பாராட்ட வேண்டிய கட்டாய கடமை உண்டு, இன்னும், அவரது வரலாற்று ஆய்வு நூலை வாங்கிப்படிப்பதும், அதனூடாக தாம் இதுவரை அறியாத வரலாற்று ஆதாரங்களை அறிந்து கொள்ளவும் இலங்கை முஸ்லிம் சமூகம் முயற்சிக்க வேண்டும், 

ஒரு சமூகம் தனது வரலாற்று இருப்பியலை,உறுதிப்படுத்தி ஆதாரங்களை முன்வைப்பது முக்கியமானதாயினும், அதனை இன்னுமொரு சமூகம்சார் புத்திஜீவித்துவ ஆய்வாளர், உறுதிப்படுத்துவது, இன்னும் பன்மடங்கு உறுதியானது, அந்தவகையில் "#குமாரிஜெயவர்த்தன" அவர்களுக்குப் பின் இலங்கை முஸ்லிம் இருப்பியல் வரலாற்றில் Dr, Rohitha, மேற்கொண்டிருக்கும் பணி, ஒரு புதிய தலைமுறைச் சாதனை என்றே கொள்ள முடியும், 

ரோஹித போன்றவர்களை முஸ்லிம் சமூகம் நன்கு பயன்படுத்திக்கொள்வதோடு, அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் ஊக்குவிப்பாக இருப்பது, எம் சமூகம்சார் இன்னும் பல ஆதாரங்களை வெளிக்கொணர உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து, 

நண்பர் ரோஹிதவின் பணியை,  முஸ்லிம் சமூகம்,மனந்திறந்து பாராட்டுவதுடன் அவருக்கான உற்சாகத்தையும், ஊக்குவிப்புக்களையும் வழங்க முன்வர வேண்டும்,,  அது அவரை இன்னும் இவ்வாறான பணிகளில் ஈடுபடத் தூண்டும், இது பற்றி சிந்திப்போமாக, 

MUFIZAL ABOOBUCKER,
SENIOR LECTURER ,
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA,

11 கருத்துரைகள்:

இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் வேர் அர‌பிக‌ள் என்ப‌தே அடிப்ப‌டையில் பிழையான‌தாகும். அர‌புகளுக்கும் வேர் இல‌ங்கை முஸ்லிம்க‌ளாகும் என்ப‌தே உண்மை. இத‌னை ஆராயும் சிங்க‌ள‌ புத்திஜீவிக‌ளுக்கே முஸ்லிம்க‌ள் உத‌வ‌ முடியும்.

What's the name of the book and where it will be available?

சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் அவர்களுக்கு எமது மனமாரந்த நன்றிகள். சகோதரர் ரோஹித அவர்களுடைய புத்தகம் எங்கு கிடைக்கும் குறிப்பாக அதன் மென்பொருளைப் பெறமுடியுமாயின் அதனை தமிழுக்கு மொழிபெயர்ப்பது பற்றி யோசிக்கமுடியும். bravolk@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தயவுசெய்து அதுபற்றி அறியத்தாருங்கள் .நன்றி. ஸலாம்.

தயவு செய்து அப் புத்தகத்தின் பெயரை வெளியிடவும்

Bro. Dr. Rohitha Weldon and thanks. Our society must have to backup his honesty work.

நன்றி

Mr.ரோகித அவர்களுக்கு.

Please read the article clearly, it's say the research book is the Connection between Sri Lanka and Arab Traders, its not about the muslim history in Sri Lanka

Dr. Rohitha We as Sri Lankan Salute you for your great job. Kindly reveal the name of the book.

Well-done Dr.Rohitha Appreciated for your Great Job for Our Muslim Community

Best Wishes Dr.Rohitha, appreciated

Post a Comment